தப்பான அர்த்தத்தில் பெண்களிடம் விளையாடினேனா? லைவில் உண்மையை நிரூபித்த அசீம்.. குவியும் கருத்துக்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நான் தப்பான அர்த்தத்தில் விளையாடி இருந்தால் அந்த பெண்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்னை பற்றி குறை கூறுவார்கள் ஆனால் அப்படி நடக்கவில்லையே என்று அசீம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்குள் அசீம் தனலட்சுமி இடம் டாஸ்கில் விளையாடும் போது அத்துமீறி கை வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
பிக் பாஸ் டைட்டில் அசீம் ஜெயித்த பிறகும் பெண்கள் இடம் அத்துமீறி டாஸ்க்கில் அசீம் விளையாடினார் என்று பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது.
முதல்முறையாக நான் தப்பான அர்த்தத்தில் தனலட்சுமியுடன் விளையாடவில்லை என்று அசீம் தனலட்சுமிக்கு போன் செய்து ரசிகர்களின் முன்பு பேச வைத்திருக்கிறார்.

தொடரும் சமூக வலைத்தள பேச்சு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் ஆன நிலையிலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு சமூக வலைதளத்தில் இப்ப வரைக்கும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் தொடர்ந்து பல்வேறு சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு பலவிதமாக கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ரசிகர்கள் தங்களுக்கு சரியான பதில் கிடைத்துவிட்டது என்று அசீமை பாராட்டி வருகின்றனர்.

கடைசி நேரம் மாற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அசீம் ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்ததும் பெண்களை தர குறைவாக பேசிக் கொண்டிருக்கிறார். கோபத்தில் எதிரே இருப்பவர்களை மட்டம் தட்டி பேசுகிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்து வந்தது. ஆனாலும் ஒவ்வொரு வாரமும் அதிகமான ஓட்டுகள் அவருக்கு கிடைத்து வந்தது. இந்த நிலையில் கடைசி வாரத்தில் அவர் டைட்டில் ஜெயிக்க மாட்டார் என்று அதிகமானோர் நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் அனைத்தும் பொய்யாக மாறி அவர் டைட்டில் ஜெயித்து விட்டார்.

பெண்களிடம் ஏற்பட்ட மோதல்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பெண் போட்டியாளர்கள் பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் உண்மையாகத்தான் இருக்கிறார் என்று அவரை குறித்து தகவல்களை கூறி வந்தனர். ஆனால் அவரை வெறுக்கும் ரசிகர்கள் பலர் அவர் பெண்களிடம் தப்பான அர்த்தத்தில் தான் டாஸ்க் விஷயத்தில் கூட நடந்து கொள்கிறார் என்று கூறி வந்தனர். குறிப்பாக பொம்மை டாக்கில் தனலட்சுமியை பிடித்து தள்ளியது ஷெரினா மீது அமர்ந்து கொண்டு பொம்மையை தடுக்க நினைத்தது, மகேஸ்வரி இடம் நீயெல்லாம் ஒன்றுக்கும் லாய்க்கு ஆக மாட்ட, வெளியே போனா உன்னை எல்லாரும் காரி துப்புவார்கள் என்று பேசியது, ஷிவினை உருவ கேலி செய்தது என பல்வேறு செயல்களை திட்டி வருகின்றனர்.

லைவில் நிரூபித்த ஆதாரம்
இந்த நிலையில் முதல் முறையாக அசீம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போது லைவில் தனலட்சுமிக்கு போன் செய்து நான் உன்னிடம் தப்பான அர்த்தத்தில் விளையாடினானா தங்கச்சி என்று கேட்க, அதற்கு இல்லை அண்ணா அந்த நேரத்தில் டாஸ்க் நேரத்தில் நீங்க டாஸ்க்காக தான் அப்படி விளையாடினீர்கள் என்று சொல்ல, பார்த்திங்களா வேற எப்படி நீங்க பெண்களிடம் தப்பாக விளையாடினார்கள் என்று சொல்லுவீங்க ?பெண்களே என்னை குறை சொல்லாத போது? என்று தன் மீது தப்பில்லை என்று அசீம் கூற, இதுவெல்லாம் செட்டப் தானே அசீமால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனலட்சுமி, ஆயிஷா எல்லோரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு டோட்டலாக மாறிவிட்டார்கள் என்று குற்றச்சாட்டுகளை நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

கருத்தில் மாறுபடாத மகேஸ்வரி
ஆனால் தொடர்ந்து மகேஸ்வரி மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் விளையாடியது தவறான முன் உதாரணம், அவருக்கு டைட்டில் கொடுத்தது தவறானது என்று கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் அசீம் முதல் பேட்டியில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்களில் பாம்பு மகேஸ்வரி தான் என்று தன்னுடைய வஞ்சகத்தை கக்கி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் அசீமை விடாமல் கலாய்க்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications