ரச்சிதா பற்றி பல ரகசியங்களை கூறிய சக நடிகர்... அப்போ பிக் பாஸில் மட்டும்? இனி இதுதான் நடக்க போகுதா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த நடிகர் சத்தியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதாவை குறித்து பல உண்மைகளை கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதாவை குறித்து சக போட்டியாளர்கள் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் அதற்கு நடிகர் சத்யா கூறிய உண்மைகள், பதிலாக இருந்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒரே குற்றச்சாட்டு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிவில் சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரச்சிதா ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனதும் இவருடைய ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுத்து வரும் நிலையில் சக போட்டியாளர்கள் இவரை குறித்து இவர் முகமூடி அணிந்து கொண்டு இந்த வீட்டிற்குள் வலம் வருகிறார், எந்த சூழ்நிலையிலும் கோபத்தை காட்டாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் ,ஆனால் வெளியே இவர் இப்படி கிடையாது என்று பல்வேறு குற்றசாட்டுகளை குறிப்பிடுகிறார்கள் .குறிப்பாக இவருடைய நெருங்கிய தோழியான மைனா நந்தினி ரச்சிதாவை குறித்து இதே குற்றச்சாட்டுகளை தான் கூறியிருந்தார்.

சக நடிகரின் கருத்து
அதுபோல சின்னத்திரை நடிகைகளாக இருந்த அசீம் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் ரச்சிதாவை நாமினேஷன் செய்யும்போதெல்லாம் ரச்சிதா அவருடைய நிஜ கேரக்டரை காட்டவில்லை. போலியாக இங்கே நடித்துக் கொண்டிருக்கிறார். முகமூடி அணிகிறார் என்று குற்றம் சுமத்தி தான் நாமினேஷன் செய்து வருகிறார். இந்த நிலையில் ரச்சிதாவை பற்றி அவரோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் வில்லனாக நடித்த நடிகர் சத்யா லைவ் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அதை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த திமிர் கிடையாதாம்
ரச்சிதாவை பற்றி சொல்லனும்னா அவங்க ரொம்ப ரொம்ப ஸ்வீட் பர்சன். மனசுல எதுவும் வச்சிக்க மாட்டாங்க, ரொம்ப எல்லாரையும் கேர் பண்ணுவாங்க. பிரெண்ட்ஸ் கிட்ட எப்படி நாம பழகுவோமோ அப்படித்தான் அவர் செட்டில் எல்லோர் கிட்டயும் ரொம்ப ஜோவியலாக இருப்பாங்க, ஒரு ஹீரோயின் என்கிற நினைப்பு இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பழகுவார். நம்ம சாதாரணமாக ஒரு பிரெண்ட்ஸ் கிட்ட எப்படி பழகுவோமா அப்படித்தான் பழகுவார். ஒரு தெரியாத மனுஷங்களாக இருந்தாலும் அவங்க கிட்ட எப்படி இருக்கீங்க என கேரிக்காக பேசுவார் என்று கூறி இருக்கிறார்.

வேற காரணம் தெரியலையாம்
ரச்சிதாவை பற்றி பலரும் அவர் கோபக்காரர் ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக தான் இப்படி நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தாலும் அவருடைய ரசிகர்கள் என்னதான் நடிக்கிறாராக இருந்தாலும் 24 மணி நேர எபிசோட் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது அதில் தொடர்ந்து தற்போது 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் யாராலையும் இப்படி முழுமையாக நடிக்க முடியாது. அவர் அவருடைய நிஜமான கேரக்டரில் இருக்கிறார் ஆனால் அவரை எதைச் சொல்லி குறை சொல்வது என்று தெரியாத சக போட்டியாளர்கள் ரச்சிதாவின் மீது ஒரே குற்றச்சாட்டை அனைவரும் சுமத்தி வருகிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications