சைஸ் சரி இல்லை என இப்படி ஒரு அலப்பறையா? அதுவும் இந்த ராம் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கலையே?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்குள் ஸ்வீட் கடையை வைத்து பிரச்சனையை தொடங்கி இருக்கின்றனர்.
பிக் பாஸ் கொடுத்த பொருட்களையே இவர்கள் தனித்தனியாக பிரித்து வைத்து அதை வியாபாரம் செய்து அதில் சண்டை ச்சரவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ப்ரோமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பரபரப்பை ஏற்படுத்தாத டாஸ்க்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் தொடங்கப்படும் அந்த வகையில் இந்த வாரம் ஸ்வீட் கடைகளை வைத்து டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் டிவி சேனல் டாஸ்க் நடைபெற்றது. அதற்கு முந்தைய வாரம் பொம்மை டாஸ்க் நடைபெற்றது .ஆனால் டிவி சேனல் டாஸ்கில் அந்த அளவிற்கு பெரிய பிரச்சனைகளும், சண்டைகளும் வரவில்லை .நிகழ்ச்சி கொஞ்சம் ஓரளவிற்கு சுமாராகவே போய்க்கொண்டிருந்தது. ஒரு சில நேரங்களில் இவர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் அடுத்த நிமிடமே போட்டியாளர்கள் பேசி அதை சப் என்று ஆக்கிவிட்டனர்.

ஆரம்பத்தில் அப்படி இப்போ இப்படி
ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பொம்மை டாஸ்க் ரசிகர்களின் மத்தியில் பலருடைய உண்மை முகங்களை தெரிய வைத்தது. அசீம், தனலட்சுமி மீது வைத்த குற்றச்சாட்டு மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களின் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் இருந்தாலும் கடந்த வாரம் நடைபெற்ற டிவி சேனல்கள் நிகழ்ச்சியில் தன்னுடைய பெஸ்ட் கொடுத்து ரசிகர்களின் மத்தியில் அதிகமான வாக்குகளை பெற்று விட்டார்.

தொடங்கியது பிரச்சனை
இரண்டு வாரங்கள் அசீம் கமல் முன்னிலையில் கண்டிப்புகளை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது கடந்த வாரம் கமல் அவரை பாராட்டியது அவருக்கு மேலும் உசுப்பேத்தி விட்டது போல இருக்கின்றது போல, அதனால் தான் இன்றைய ப்ரோமோவில் தன்னுடைய குரலை மீண்டும் உயர்த்தி இருக்கிறார். இன்றைய முதல் ப்ரோமோவின் ஆரம்பத்தில் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் ஸ்வீட் விற்க்கும் ஒரு விற்பனையாளராக இருக்கின்றனர். சக போட்டியாளர்கள் அமர்ந்திருக்கும் போது ஏடிகே நாங்க செய்த ஸ்வீட்டை மட்டும் நீங்கள் அத்தனை கேள்வி கேட்டீங்க என்று பிரச்சனையை தொடங்குகிறார்.

ராம் செயலை ஆயிஷா தடுத்துவிட்டாரே
பிக் பாஸ் தந்த ஸ்வீட்டை தான் நாங்கள் இரண்டு பாக்ஸாக பிரித்து வைத்திருந்தோம் ஆனால் அதில் ஒரு பாக்ஸில் கிரஞ்சியா இருக்கு ஒரு பாக்ஸில் கிரஞ்ச்யா இல்லையென்று சொல்லுகிறிங்க ,இது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ஆயிஷா எங்களிடம் அப்போது இத்தனை கேள்விகளை நீங்க கேட்கல என்று சொல்கிறார். அதற்கு அசீம் உங்களுடைய ஆக்சன் தான் எங்களுடைய ரியாக்ஷன் என்று குரலை உயர்த்தி சண்டை போடுகிறார். அப்போது ராம் முதல் முறையாக உங்களுடைய ரியாக்ஷன்க்கு என்று கையை நீட்டி ராம் பேசும்போது ஆயிஷா ராமை தடுத்து நிறுத்துகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ராமுக்கு கோபம் வருமா ?முதல் முறையாக ராம் கோபத்தில் பேசுகிறார், ஆனால் அதையும் ஆயிஷா இப்படி தடுத்து விடுகிறாரே என்று நினைக்கத் தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications