ஆரம்பத்தில் ஆமாம் சாமி போட்ட நண்பரோடு இப்படியா சண்டை? சாப்பிட விடாமல் பிக் பாஸ்க்குள் புது பிரச்சனை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் இரண்டு வாரங்களாக அமைதியாக இருந்த நிலையில் நேற்று எபிசோடில் இருந்து தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார்.
நேற்று சாப்பாட்டில் உப்பை ஷிவின் கொட்டியதால் வந்த பிரச்சனை இன்றும் அசீம் மற்றும் ஏடிகே இடையில் பூதாகரமாக வெடித்து வருகிறது.
டாஸ்க் விறுவிறுப்பு ஏற்பட வேண்டும் என்று ஷிவின் செய்த வேலையால் சண்டை சச்சரவுகளோடு பிக் பாஸ் வீடு ரணகளம் ஆகிக்கொண்டிருக்கிறது.

ஷிவின் செய்த சேட்டை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்களுக்குள் சண்டை ஏற்படுவதை மையமாகக் கொண்டுதான் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புது புது டாஸ்க்கள் ஒவ்வொரு சீசனிலும் வந்து கொண்டிருந்தாலும், சண்டைகளும் புதுசு புதுசா எப்ப வேணாலும் வெடித்து விடுகிறது. இந்த மாதிரி தான் நேற்றைய நாளில் லஞ்சரி பட்ஜெட்டுக்காக மியூசியம் டாஸ்க் நடைபெற்று வருகிறது .அதில் ராணியாக இருக்கும் ரட்சிதாவின் சாப்பாட்டில் ஷிவின் அதிகமாக உப்பை கலந்து வைத்து விட்டார். தன்னுடைய சாப்பாட்டை சரியாக கவனிக்காத தளபதிக்கு தண்டனை கிடைக்கும் என்று இவர் செய்த செயலால் டாஸ்க் எடுபடாமல் போய்விட்டது.

உப்பு தப்பா போச்சி
அரண்மனை கெட்டப்ப், மியூசியம் கெட்டப் என அனைத்தும் கச்சிதமாக இருந்தாலும் இவர்களுக்குள் ஏற்பட்ட சஞ்சலங்களும் சச்சரவுகளும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு அலுப்பு தட்ட வைத்து விட்டது. அதுவும் போட்டியாளர்கள் அனைவரும் அசீம் உடன் மல்லுகட்டியதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். காரணம் அசீம்க்கு கொடுத்த சாப்பாட்டில் உப்பு சரியாக வைக்கப்பட்டது விட்டு, ரட்சிதாவின் சாப்பாட்டில் மட்டும் அதிகமாக உப்பை கலந்து விட்டனர் .இதனால் உப்பு சரியாக இருக்கிறதா ?சாப்பாட்டில் எதுவும் கலந்திருக்கிறதா? இல்லையா? என்பதை சரி பார்க்க வேண்டியது தளபதியின் பொறுப்பு தான். அதனால் தளபதிக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஷிவின் முறையிட அதுவரைக்கும் இதைப் பற்றி யோசிக்காத விக்ரமனும் அதற்கு ஆமாம் சாமி போட்டுவிட்டார்.

கடுப்பான ஏடிகே
இரண்டு வாரங்களாக அமைதியாக இருந்த அசீம் நேற்று எபிசோட்டில் தன்னுடைய பழைய நிலைக்கு மீண்டும் மாறிவிட்டார். விக்ரமனை மட்டும் அல்லாமல் சக போட்டியாளராக அனைவரையும் சரட்டு மேனிக்கு இவர் திட்டி தீர்த்து விட்டார். கூடுதலாக விக்ரமனுக்கு வாயா போயா என்று அர்ச்சனைகள் கிடைத்தது .இந்த நிலையில் இன்றைய எபிசோடடில் முதல் ப்ரோமோவில் ஏடிகே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவரை நேற்றைய காரணத்தைக் கூறி இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் கோபமான ஏடிகே இந்த மாதிரி சாப்பிடும்போது வந்து நீ பேசறது, கேவலமானது தெரியுமா? இத விட அசிங்கமானது வேறு எதுவும் கிடையாது என்று கூறுகிறார். அதற்கு அசிங்கம், கிசிங்கம் என்று எல்லாம் நீ பேசாத என அசிம் பேசுகிறார்.

நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை
விடாத ஏடிகே, மகேஸ்வரியை கழுவி கழுவி ஊத்துற என்று சொல்லுவாலா உன்ன போய் பாரு எவ்வளவு பேரு ஊத்துறாங்க என்று பேச, ஆமா லாஸ்ட்ல போகும்போது யார கழுவி ஊத்திட்டு போறாங்கன்னு நாங்களும் பார்க்கிறோம் என அசீம் பேச, இனிமே நீ பண்ணுறதெல்லாம் உன் முகத்துக்கு நேரா சொல்றேன் என ஏடிகேயும் விடாமல் பேச, உன்ன கம்பேர் பண்ணும்போது அமுதவாணன் எவ்வளவோ நல்லவர் என்று அசீம் பேச, உன்ன கம்பேர் பண்ணும் போது இந்த வீட்டில் எல்லாருமே நல்லவங்க தான் என ஏடிகேயும், அதோடு உனக்கும் எனக்கும் அறவே ஒத்துப்போகாது இதோட பேச்சை நிப்பாட்டிக்கலாம் என்று பேச்சை முடிக்கிறார். இன்றைய ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் அசீம் கிளம்பிவிட்டார் அதனால் இந்த வாரம் பஞ்சாயத்தில் அவர்தான் சிங்கப் போகிறாரா? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொம்மை டாஸ்க்கில் அசீம் சொன்னதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு அவர்தான் என்னுடைய நண்பர் என்று இருந்த ஏ டி கே இப்போது இப்படி மாறிவிட்டாரே என்று பலருக்கு வியப்பையும் கொடுத்திருக்கிறதாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications