தலைவர் பதவிக்காக இப்படி ஒரு போட்டியா? கயிற்றில் தொங்கியபடி அமர்க்களப்படுத்தும் "அந்த" போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போதைய வாரத்திற்கான தலைவர் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
மணிகண்டன், தனலட்சுமி, ஷிவின் மூவரும் கயிற்றில் தொங்கியபடி நடக்கும் போட்டியை பார்த்து பலரும் கலாய்த்து இருக்கிறார்கள்.

இந்த வார போட்டி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 57வது நாள் தொடங்கி இருக்கிறது. இன்றைய முதல் ப்ரோமோ வில் இந்த வார தலைவர் பதவிக்காக போட்டிகள் தொடங்குகிறது. அதில் ஷிவின், மணிகண்டன், தனலட்சுமி மூன்று பேரும் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு கயிற்றில் இரண்டு முடிச்சுகளோடு, இரண்டு கயிறுகள் கொடுக்கப்படும். ஒரு கையால் ஒரு கயிறை மட்டுமே பிடித்தபடி மற்ற போட்டியாளர்களின் கயிற்றில் இருக்கும் முடிச்சை அவிழ்த்து அதே சமயத்தில் அவரவர் கைற்றை மற்ற போட்டியாளர்களிடமிருந்து பாதுகாத்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் கீழே ஸ்ப்ரிங்கால் செய்யப்பட்ட பலகையின் மேலே நின்று கொண்டு விளையாடி வருகிறார்கள்.

வாய்ப்பு கிடைக்குமா
ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற தலைவர் டாஸ்க்கில் நொடி பொழுதில் தான் வெளியேறிவிட்ட வேகத்தை தனலட்சுமி கோபத்தோடு காட்டிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் இந்த வாரமும் தனலட்சுமி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் மணிகண்டன் ஏற்கனவே ஒரு முறை தலைவர் பதவியில் இருந்திருக்கிறார். இந்த முறையில் மறுபடியும் இவர் வருவாரா? என்று சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

எப்படியும் பஞ்சாயத்து இருக்கு
ஷிவின் இந்த வாரம் தலைவராக வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஷிவின் முதலாவதாக இந்த விளையாட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். கடைசியில் போட்டி தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இடையில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தாலும் தனலட்சுமி ஜெயித்தால் என்ன மாதிரி இந்த வீடு மாறப்போகிறது? என்றும் தோற்றால் இன்று என்ன நடக்கப் போகிறதோ? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ரசிகர்களின் கண்ணில் பட்ட செயல்
இது மட்டுமல்லாமல் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருப்பதால் தனலட்சுமி எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று காரசாரமாக விளையாடி கொண்டிருக்கிறார். தன்னுடைய கையிற்றை விடாமல் தொங்கியபடியே அவர் மணிகண்டனின் மீது முட்டி மோதி அவருடைய கயிற்றின் முடிச்சுகளை அவிழ்ப்பதில் குறியாக இருக்கிறார். இதில் தனலட்சுமி ஒரு காலை கீழே ஊற்றிக்கொண்டு மணிகண்டனின் கயிற்றின் முடிச்சுகளை அவிழ்க்கும் செயலை சிலர் கவனித்து அதை ஸ்கிரீன்ஷாட் ஆக வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வாரம் தனலட்சுமி கேப்டனாக இருந்தால் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications