நாமினேஷன் free zoneக்கு தேர்வான போட்டியாளர்கள்.. இந்த வாரம் வெளியே செல்பவருக்கு இப்படி ஒரு ஆஃபரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து பாதுகாக்கப்படும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்த வாரம் டேஞ்சர் ஷோனில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த ஆஃபர் கிடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வார எலிமினேஷன் போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஏழாவது வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் மட்டுமே இந்த சீசனில் முதல்முறையாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் அசீம், விக்ரமன், ஜனனி, ரச்சிதா, மணிகண்டன், ஏடிகே என ஆறு போட்டியாளர்கள் பெயர் இருக்கின்றனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்று அதிகமான ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். காரணம் இதற்கு முந்தைய வாரங்களை விட இந்த வாரத்தில் அனைவருமே தங்களுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்த வார டாஸ்க்
இந்த நிலையில் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த வாரம் நடைபெற்ற வீகென்ட் டாஸ்க் மூலமாக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த வாரத்தில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து இருக்கின்றனர். ஒரு அணியினர் சொர்க்கவாசிகளாகவும், சிலர் நகரவாசிகளாகவும் உள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள்
எல்லா டாஸ்க் போலவே இந்த டாஸ்கிலும் அதிகமான சண்டை, கோவம், அழுகை என அனைத்தும் கலந்த கலவையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய நாளுக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனலட்சுமி நரகவாசி ஆக மாற்றப்படுகிறார். அதைத்தொடர்ந்து நாமினேஷன் ஃப்ரீ சோனில் நுழைப்பவர்கள் பெயரை பிக் பாஸ் அறிவிக்கின்றனர். அதில் மணிகண்டன், அமுதவாணன், ஜனனி, ஏடிகே ஆகியோர் பெயர் இடம்பெறுகின்றது.

தனலட்சுமி என் வருத்தம்
இதுவரைக்கும் சிறப்பாக விளையாடி வந்தாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே தான் இந்த நாமினேஷன் ஃப்ரீ சோனில் உள்ளே செல்ல முடியவில்லை என்று தனலட்சுமி ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து மூன்று நாள் விளையாடினதற்கு காரணமே இல்லாமல் வெளியே வந்து விட்டேன் என புலம்புகிறார். அதுமட்டுமல்லாமல் இங்க அவனவன் பிரண்ட்ஸை அவனவன் தான் உள்ளே அனுப்ப பார்ப்பான் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர் அப்போ இன்று சரியான சம்பவம் இருக்க போகிறது. இதை வைத்து தனலட்சுமி புது பிரச்சனையை தொடங்கப் போகிறார் என்று கூறுகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் ஏடிகே கடைசி இடத்தில் இருக்கும் நிலையில் ஏடிகேவுக்கு இந்த ஆஃபர் கிடைத்திருப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லையே என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications