போட்டியாளர்களால் கோபத்தில் வெளியேறிய ரச்சிதா.. மைனாவும் இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கலையே?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் தன்னுடைய கோபத்தை வெளியே காட்டாமல் இருந்த ரச்சிதாவை போட்டியாளர்கள் அனைவரும் டார்கெட் செய்து கோபப்பட வைத்திருக்கின்றனர்.
இன்றைய 87 ஆவது நாளில் முதல் பிரமோவில் போட்டியாளர்கள் ஒரு சிலர் சேர்ந்து கொண்டு ரச்சிதாவை கோபப்படுத்த அந்த இடத்தில் இருந்து விலகி செல்லும் ரச்சிதாவிடம் இப்போதுதான் உண்மை முகம் வந்திருக்கிறது என்று பலரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
ரச்சிதா இதுவரைக்கும் தன்னுடைய கோபத்தை வெளியே காட்டாமல் இருந்த நிலையில் இன்று முதல்முறையாக கோபத்தை காட்டி இருக்கும் போது இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் அவருடைய உண்மையான முகம் வந்துவிட்டது என்று ஏடிகேட் ரச்சிதாவை கலாய்த்து கொண்டிருக்கின்றார்.

ரசிகர்களின் ஆதரவு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசன்களிலும் வெவ்வேறு விதமான போட்டியாளர்கள் கலந்து கொள்வர். அந்த மாதிரி தான் தற்போதைய ஆறாவது சீசனிலும் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறையில் இருந்தும் கலந்து கொண்டிருந்தனர் .இதில் சின்னத்திரை நடிகையாக ரசிகர்களுக்கு பேவரைட் கதாநாயகியாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். சரவணன் மீனாட்சி சீரியலில் இவரை பார்த்து ரசித்த ரசிகர்கள் கூட்டம் இப்போது வரைக்கும் இவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வருகிறது. விஜய் டிவியின் டாப் கதாநாயகியாக இருந்த ரச்சிதா இப்போது வெவ்வேறு சேனல்களில் நடித்து வந்தாலும் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அசீமின் குற்றச்சாட்டு
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ரச்சிதா மகாலட்சுமி நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய கோபத்தை வெளியே காட்டாமல் மறைத்து இருக்கிறார். அவருடைய கோபம் பயங்கரமாக இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் மிரட்டி விடுவார் என்றெல்லாம் அவருக்கு எதிராக அசீம் ஆரம்பத்தில் இருந்தே கருத்து கூறி வருகிறார். அது மட்டுமல்லாமல் ரச்சிதாவை குறித்து ஆரம்பத்தில் ஆயிஷாவும் இதே வார்த்தையை கூறி வந்தார். நாட்கள் செல்ல செல்ல ஒருவேளை நான் நினைத்தது தவறு இதுதான் உண்மையான ரச்சிதாவோ என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார் ஆனால் அசீம் தன்னுடைய முடிவில் உறுதியாகவே இருக்கிறார்.

கிண்டல் கூடி போச்சு
நேற்று எபிசோட்டில் நேருக்கு நேரில் கூட ரச்சிதாவை குறித்து அசீம் இதே கருத்துக்களை தான் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் நேற்று அவருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாத நிலையில் இன்று ரச்சிதா அனைவரிடமும் சாப்பாடு வேண்டுமா? என்று கேட்டுக் கொண்டு இருக்க அவரை அமுதவாணன், ஏ டி கே, மைனா, அசீம் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். சாப்பாடு வேண்டுமா என்று ரச்சிதா கேட்டதற்கு அமுதவாணன் வந்தது பூரா உப்புமா தான் போங்க என்று பேச, அதற்கு மைனா சிரித்தபடியே தப்பு அமுதா எனக் கூற, அடுத்ததாக ரச்சிதா கோவத்தோடு அப்படியே அமுதவாணனை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, தாங்க முடியல ரச்சிதா இங்க திரும்பு என்று கூப்பிடுகிறார்.

உண்மை முகம் இது தானா
ரச்சிதா அப்படியே நின்று கொண்டிருப்பதை பார்த்து மைனா நந்தினி இது தொடரும் என்று நக்கல் செய்து கொண்டிருக்க, ஏடிகே அவர் கிடக்குறாரு அவரு என்று கூறுகிறார். அதற்கு ரச்சிதா யாராவது சாப்பிடுவீங்களா? சாப்பிட மாட்டீங்களா? என்று கேட்க அமுதவாணன் நான் சாப்பிடுவேன் என்று சொல்ல ரச்சிதா வேகமாக உள்ளே செல்கிறார். அதனைப் பார்த்த ஏடிகே பாத்தியா நாள் நெருங்க நெருங்க, எரிமலை எப்படி வெடிக்கும் என்று கிண்டல் செய்ய மைனா, அமுதவாணன், அசீம், விக்ரமன் என எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கும் போது அசீம் இப்படி சொன்னது தானதால் நேத்து எனக்கு ஒரு லைக் கூட கொடுக்கல என கேட்க இந்த பிரமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் பல்வேறு விதமான கருத்துக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications