ஏடிகே பற்றி புட்டு புட்டு வைத்த அசல் கோலார்... கோபத்தோடு கிளம்பிய அந்த நபர்... எதிர்பாராத முடிவு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 94 வது நாளுக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் அசல் கோலார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் வந்திருக்கின்றனர்.
ஏடிகே பற்றி அசல் கோலார் பேசிய வார்த்தையை கேட்டு ஏடிகே கோபத்தோடு வெளியேறுகிறார்.

குழப்பும் விருந்தினர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் தொடர்ச்சியாக போட்டியாளர்களின் மன நிலையை குழப்பும் வகையில்
புதிய விருந்தினர்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். முதல் நாளில் சுரேஷ் சக்கரவர்த்தியும் இன்னொரு youtube பிரபலமும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து போட்டியாளர்களின் நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே கூறி அவர்களை குழப்பி விட்டு சென்றிருந்தனர். தாங்கள் செய்வது இப்படித்தான் வெளியே காண்பிக்கப்படுகிறதா? என்று அனைவரும் குழம்பிக் கொண்டிருக்கும்போது அசீம் அதிகமாகவே குழப்பத்தில் இருக்கிறார்.

பிக் பாஸின் புது பிளான்
அதைத்தொடர்ந்து நேற்று விஜே பார்வதி மற்றும் விஜே ஷபானா இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து ரசிகர்களின் கருத்து மற்றும் தங்களுடைய கருத்துக்களையும் கூறி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் 7 போட்டியாளர்களையும் நன்றாக மீண்டும் குழப்பி இருக்கின்றனர். போட்டியாளர்களை தெளிவாக வைத்து விடக்கூடாது என்பதில் பிக் பாஸ் உருக்கியாக இருக்கிறது. அவர்கள் குழப்பமாக இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டி வைக்கப்பட வேண்டும் என்று தான் இந்த முறை முடிவு செய்து இருக்கிறார்கள் போல.

மீண்டும் வந்த போட்டியாளர்கள்
அந்த வகையில் இன்று ஏற்கனவே இந்த சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் வந்திருக்கின்றனர். அசல் கோலார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததும் போட்டியாளர்கள். அனைவரும் ஓடி சென்று அவர்களை வரவேற்று உபசரிக்கின்றனர். அதற்குப் பிறகு வீட்டிற்குள்ளே வந்ததும் அவர்களை பிக் பாஸ் வரவேற்கிறார். பின்பு அனைவரும் சகஜமாக பேசிக் கொண்டிருக்கும்போது ஏடிகேவிடம் அசல் நான் வெளியே சென்று சில செயல்களை பார்த்தேன். அது எனக்கு பிடிக்கவில்லை என்று ஏடிகேயின் கைகளை பிடித்துக் கொண்டு அசல் கூறுகிறார்.

ஏடிகேவை வம்பு இழுக்கும் அசல்
அசல் கூறிய வார்த்தையே கேட்டு அருகில் இருந்த ஷிவின் வாயை பிளக்க என்னன்னு சொல்லு என்ன பார்த்தா என்று ஏடிகே கேட்க அசல் அதைப்பற்றி பேசாமல் வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று சொல்ல அப்போ சரி சரி அதை பற்றி பேச விருப்பம் இல்லை என்றால் பேசாத எனக்கு பிரச்சனையே இல்லை என்று ஏடிகே பேச இந்த பிரமோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களும் ஊர் கிளவி என்று முகத்துக்கு நேராகவே பேசிக் கொண்டு இருக்கும் நிலையில் இன்று ஏடிகே பேசிய விதத்தை அசல் பேசிய விதத்தைப் பார்த்து ஏடிகே அதிகமாகவே கோபப்படுகிறார். ஏற்கனவே ஓட்டுகளின் அடிப்படையில் எண்ணிக்கை தான் இந்த வாரத்தின் கடைசி நிலையில் இருக்கும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸால் வெளியேற்ற படுகிறாரா? அல்லது பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறப் போகிறாரா? என்று பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications