தனலட்சுமி சொன்னது பொய்யா? லைவ் வராத காரணம்!? ஆதாரத்தை வெளியிட்டு சீண்டும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி தான் இரண்டு வாரம் லைவ் வராத காரணத்தை பற்றி கூறியிருக்கிறார். அதை குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தனலட்சுமி தன்னுடைய கைகளில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் லாவோவை டாட்டூ போட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை முழுமையாக அனைத்து எபிசோடுகளையும் பார்த்துவிட்டு தான் தனலட்சுமி ரசிகர்களிடம் பேச வேண்டும் என்று காத்திருந்தார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

லைவ் வராத காரணம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தனலட்சுமி இரண்டு வாரங்களுக்கு பிறகு முதல் முறையாக லைவில் ரசிகர்களிடம் பேசி இருந்தார். அதற்கு பிறகு தன்னுடைய பெர்சனல் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்தும் லைவில் ரசிகர்களிடம் பேசி இருந்தார். பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் தான் இரண்டு வாரம் ரசிகர்களை சந்திக்காத காரணம் தன்னுடைய வீட்டு சூழ்நிலை. வீட்டில் சில பிரச்சனைகள் இருந்தது நான் அதையெல்லாம் சரி செய்து விட்டு நார்மலான நிலைக்கு வந்த பிறகு லைவ் வந்துள்ளேன் என்று கூறி இருக்கிறார்.

டாட்டூ வீடியோ
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் லாகோவை தனலட்சுமி தன்னுடைய கைகளில் பச்சை குத்தியிருக்கிறார். அவருடைய டாட்டூ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைக் குறித்து ரசிகர்கள் தனலட்சுமி காணவில்லை என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருப்பதை அறிந்து மேலும் தேட வேண்டும் என்பதற்காகத்தான் தனலட்சுமி வெளியே வராமல் இருந்திருக்கிறார். இந்த நேரத்தில் டாட்டூ போட்டிருந்த தனலட்சுமி ரசிகர்கள் பலர் தன்னை தேடுவது தெரிந்தும் ரசிகர்களுக்காக பதிலளிக்க விரும்பாமல் இருந்திருக்கிறார். இது இப்போதே தான் செலிபிரிட்டியாகி விட்டோம் என்ற ஆணவம் தான் என்று தனலட்சுமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள்.

நெகட்டிவ் கருத்துக்கள்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனலட்சுமி விக்ரமனை குறித்து நெகட்டிவாக பேசியிருப்பதை குறித்தும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் இருந்தே தனலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து பல பேருடன் சண்டை போட்டவர் விக்ரமன் தான் ஆனால் விக்ரமன் உள்ளே நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் அந்த நிகழ்ச்சிக்கு வேஸ்ட் என்று தனலட்சுமி கூறி இருப்பது நம்பிக்கை துரோகம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைத்து எபிசோடுகளையும் பார்த்து அசீமுக்கு சமூக வலைத்தளத்தில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை தனலட்சுமி தெரிந்துகொண்டு விக்ரமனை தான் நெகட்டிவ்வாக பேசியதாலே தான் மீண்டும் பாப்புலராக ஆகிவிடலாம் பலர் தன்னை நெகட்டிவ் ஆகவோ திட்டினாலும் பரவாயில்லை என்று தனலட்சுமி செயல்படுகிறாரோ? என்ற எண்ணமும் ரசிகர்களின் மத்தியில் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.

வெளியே மாறிப்போன பேச்சு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது மணிகண்டன் விக்ரமனுடன் அதிகமாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனைகள் முட்டிக் கொண்டிருந்தது. ஆனால் வெளியே வந்த பிறகு விக்ரமனை குறித்து மணிகண்டன் ஒரு இடத்திலும் தவறாக பேசாமல் நல்ல விதமாகவே பாராட்டி வருகிறார். ஆனால் உள்ளே அண்ணன் என்கிற மாதிரி தனலட்சுமிக்கு ஆதரவாக ஒவ்வொரு இடத்திலும் செயல்பட்டு வந்த விக்ரமனை பற்றி தனலட்சுமி இரு வாரங்கள் கழித்து கருத்து கூறுவது நெகட்டிவ் இமேஜ் உருவாக்குவதற்காகத்தான் என்று விக்ரமன் தனலட்சுமிக்கு சப்போர்ட் செய்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications