பிக் பாஸ் 6 கிராண்ட் பினாலே: குயின்சி, மணிகண்டனின் எதிர்பார்க்காத பெர்பார்மன்ஸ்? லீக் ஆன தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நாளை கிராண்ட் பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கான சூட்டிங் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் மணிகண்டன் மற்றும் குயின்சி இருவரும் டான்ஸ் ஆட இருக்கிறார்களாம்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் என்ன பாடலுக்கு டான்ஸ் ஆடாக இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கிராண்ட் பினாலே

கிராண்ட் பினாலே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையோடு முடிவடையே இருக்கிறது. இந்த நிலையில் நாளை கிராண்ட் பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நேரத்தில் இன்று அதற்கான சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதற்கான பல தகவல்கள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்துகொண்டு எவிக்டாகி வெளியே சென்றிருந்த மணிகண்டன் மற்றும் குயின்சி இருவரும் டான்ஸ் ஆட இருக்கிறார்களாம்.

ரசிகர்களை கவர்ந்த டான்ஸ்

ரசிகர்களை கவர்ந்த டான்ஸ்

ஏற்கனவே குயின்சி பிக் பாஸ் வீட்டிற்குள் மல்லிகைப்பூ பாடலுக்கு டான்ஸ் ஆடின வீடியோ ரசிகர்களின் மத்தியில் அதிகமாக வைரலானது. குயின்சியின் டான்ஸ் ரசிகர்கள் அதிகமானோர் ரசிக்க தொடங்கினர். அதன் அடிப்படையில் தான் குயின்சி கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கும் போது கூட டான்ஸ் ஆடி இருந்தார். இந்த நிலையில் அந்த வீடியோவும் ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்று வந்தது. இந்த நிலையில் அப்போது குயின்சியோடு ஜோடியாக மணிகண்டன் தான் டான்ஸ் ஆடி இருந்தார். அவர் தற்போது கிராண்ட் பினாலே ஜோடியாக டான்ஸ் ஆட இருக்கிறார்களாம்.

இந்த பாடல்கள் தான்

இந்த பாடல்கள் தான்

நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் குயின்சி மற்றும் மணிகண்டன் இருவரும் ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் வரும் தலைவா வா தலைவா எனும் பாடலுக்கும், லவ் டுடே திரைப்படத்தில் வரும் மாமா குட்டி பாடலுக்கும் வாரிசு திரைப்படத்தில் வரும் ஜிமிக்கி பாடலுக்கும் சேர்ந்து டான்ஸ் ஆட இருக்கிறார்களாம். இவர்கள் இருவருடைய டான்ஸை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கலாம். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் இந்த பாடலுக்கு வெறித்தனமாக பிராக்டிஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

வெறித்தனமான டான்ஸ்

வெறித்தனமான டான்ஸ்

ஏற்கனவே இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்று யூகிக்க முடியாத வகையில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்து விக்ரமன் ஜெயிப்பாரா அல்லது அசீம் ஜெயிப்பாரா அல்லது ஷிவின் ஜெயிப்பாங்களா என ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். அதே ஆர்வம் இப்போது வரைக்கும் இருந்து வருகிறது. மூவருக்கும் அதிகமான சப்போர்ட் சமூக வலைத்தளத்தில் இருந்து வருகிறது. இதில் யார் ஜெயிப்பார்கள் யார் இரண்டாவது, மூன்றாவது வருவார்கள் என்று பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கான சூட்டிங் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+