உண்மையா..?? பொய்யா..?? பிக் பாஸுக்கான அத்தனை பொருத்தமும் அம்சமாக இருக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:சமீபத்தில் பிக் பாஸ் 6 குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

வழக்கம்போல் இந்த முறையும் பிக் பாஸ்6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கின்றன. நிகழ்ச்சியில் யார்? யார்? கலந்து கொள்வார் என்பது நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் போது தான் உறுதியாக இதுவரை தெரிந்து உள்ளது. இருப்பினும் பார்ப்பதற்கு சுவாரசியமா சில நிகழ்ச்சி குறித்த அப்டேட்கள் சூடாக இணையத்தில் பரவி வருகிறது.

முந்தைய சீசன்களை விட சுவாரஸ்யம் குறைவு

முந்தைய சீசன்களை விட சுவாரஸ்யம் குறைவு

ஒவ்வொரு சீசனிலும் புதுமையாகவும் வித்தியாசமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும், முதல் மூன்று சீசனங்களில் இருந்த அளவிற்கு சுவாரசியங்கள் மற்ற இரண்டு சீசன்களிலும் இல்லை என்ற தான் பேசப்பட்டன. எனவே இந்த முறை இழந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்தை மீட்கும் பொருட்டு போட்டியாளர்கள் தேர்வில் இருந்தே பிக் பாஸ் குழு அதிகம் கவனத்தை செலுத்த வாய்ப்பு இருக்கிறது.முதல் மூன்று சீசன்களிலும் மக்களுக்கு பரிச்சயமான நபர்களை போட்டியாளர்களாக களம் காண செய்த பிக் பாஸ் குழு அடுத்த இரண்டு சீசன்களில் பெரிய அளவில் மக்களிடம் பிரபலம் ஆகாதவர்களையும் சரிவர தமிழ் பேசாத தெரியாதவர்களையும் களம் இறக்கியது நிகழ்ச்சியின் மைனசாக கருத்துகள் பகிரப்பட்டு வந்தது.

 வழக்கம் போல் பரவும் வதந்தி

வழக்கம் போல் பரவும் வதந்தி

ஒவ்வொரு முறை பிக் பாஸ் சீசன் அறிவிப்பின்போதும் அந்த நேரத்தில் பிரபலமாகவும், சர்ச்சைக்குரியவர்களாகவும் இருப்பவர்களை குறிப்பிட்டு அவர்களை பிக் பாஸ் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்று ஒரு போட்டியாளர் பட்டியல் இணையத்தில் உலா வரும். அதைப் போன்று இம்முறையும் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளவிருக்கும் பெண் போட்டியாளர்கள் என்று ஒரு சில நாட்களாக ஒரு பட்டியல் இணையத்தில் பரவி வருகிறது.

ஜம்முன்னு இருக்கும் போட்டியாளர்கள்

ஜம்முன்னு இருக்கும் போட்டியாளர்கள்

இந்த முறை பரவி வரும் பெண் போட்டியாளர் பட்டியலை பார்த்த நெட்டிசன்கள்.. உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனையா? வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமா? பிக் பாஸ் போட்டிக்கு வாங்க.. என்று சொல்வது போல் இருப்பதாக கலாய்த்து வருகின்றனர். பெண் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பவர்கள் பட்டியலில் வி.ஜே அஞ்சனா, விஜய் டிவி டி.டி, தர்ஷா குப்தா, சிங்கர் ராஜலட்சுமி, இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி, ரோஷினி, அர்ச்சனா, மனிஷாயாதவ்,சில்பா மஞ்சுநாத், ஸ்ரீநிதி, போன்றவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

உண்மையாக இருக்குமோ

உண்மையாக இருக்குமோ

பிக் பாஸ் சீசனின் முந்தைய சீசன் போட்டியாளர்களை கம்பேர் செய்து பார்க்கும் பொழுது இந்த பட்டியல் ஒரு வேளை உண்மையாக இருக்குமோ!? என்றும் நெட்டிசன்கள் கருதி வருகின்றனர். ஒரு சில குறிப்பிட்ட கேட்டகிரியில் இருந்து செலிபிரட்டிகளை தேர்ந்தெடுத்து போட்டியாளர்களாக களம் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கும் விஜய் டிவி. அதைப்போலவே இந்த பட்டியலில் இருக்கும் செலிபிரிட்டிகளும் முந்தைய சீசனில் கலந்து கொண்ட செலிபிரிட்டிகளின் கேட்டகிரியோடு மேட்ச் ஆவதால் இது உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த பட்டியல் எப்படி பரவினாலும் நிகழ்ச்சி அன்று கமல் வாயிலிருந்து அந்தப் போட்டியாளர் பெயர் வரும் வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்பதுதான் உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+