நந்தினி செய்தது எனக்கே பிடிக்கவில்லை..கோபமாகத்தான் இருக்கிறது..பிறகு தான் நினைவு வந்தது கணவர் கூறியது
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் நந்தினி செய்த செயல் எனக்கே பிடிக்கவில்லை என்று பல தகவல்களை அவருடைய கணவர் யோகேஷ் கூறியிருக்கிறார்.
கடந்த வாரத்தில் கூட கமல் நந்தினிக்கு அட்வைஸ் கொடுத்திருந்த நேரத்தில் அவரைப் பற்றிய பல ரகசியங்களை கணவர் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

கணவர் கூறிய தகவல்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் தான் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருந்து வருகின்றனர். 11 வது வாரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பில் களம் இறங்கிய மைனா நந்தினி இந்த நிகழ்ச்சியில் செய்வதை குறித்து பலரும் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர். அதை குறித்து அவருடைய கணவர் பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.

கேரக்டரே இதுதான்
ஆரம்பத்தில் இருந்து மைனா நந்தினி செய்யும் செயல்களை ஒரு சிலர் கலாய்த்து வரும் நிலையில் இத்தனை வருடங்களாக மைனா உடன் பழகிய எனக்கு அவர் மீது கோபம் வர தொடங்கிவிட்டது. எதற்காக இப்படி செய்கிறார் என்று என்னை அறியாமலே நினைக்கத் தொடங்கி விட்டேன். அதற்கு பிறகு தான் எனக்கே தெரிந்தது மைனாவின் கேரக்டரை இதுதானே என்று, எனக்கே மறந்து விட்டது. ஆனால் அதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்ப்பவர் எப்படி புரிந்து கொள்வார்கள்? மைனா அவருடைய கேரக்டரில் தான் எப்போதும் இருந்து வருகிறார். அவர் அங்கே நடித்துக் கொண்டிருந்தால் அனைவருக்கும் பிடித்த விதமாக நடித்துக் கொண்டிருக்கலாம்.

கஷ்டமாகத்தான் இருக்கிறது
மைனா என்ன மாதிரி கோபத்தில் இருந்தாலும் யாரிடமும் திட்டிவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அதை மறந்து விடுவார். அது மட்டுமல்லாமல் என்னதான் அழுது கொண்டிருந்தாலும் அப்போதும் அவர் சிரித்து விடுவார். இந்த மாதிரி இருப்பதால்தான் எனக்கே மைனாவை ரொம்பவே பிடித்தது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் செய்வதை பார்த்து பலர் இவர் நடிக்கிறார் எப்போதும் ஒருவரால் எப்படி காமெடி செய்து கொண்டிருக்க முடியும் என்று கேட்கிறார்கள். அதுவும் குறிப்பாக அவருக்கு நன்கு பழக்கமான நண்பர்களாக இருந்த மணிகண்டன் மற்றும் அமுதவாணன் கூட சில நேரங்களில் இதே கேள்விகளை கேட்கிறார்கள் இது கஷ்டமாகத்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மாற்றம் நடக்கும் என எதிர்பார்ப்பு
ரசிகர்கள் பலர் கமல் பேசும்போது கூட எப்போதும் நக்கலாக மைனா பேசுவதாக கூறி வருகிறார்கள். ஆனால் மைனா எப்போதுமே நிஜத்தில் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார். அது போலவே அங்கேயும் பேசுகிறார். அவர் அவ்வளவு பெரிய கலைஞர் அவர் முன்பு இப்படி பேசக்கூடாது என்பது தெரிந்திருந்தாலும், அவளை மீறியும் அவளுடைய கேரக்டர் வெளியே வந்து விடுகிறது. ஆனாலும் கடந்த வாரத்தில் கமல் செத்த வீட்டில் போய் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கக் கூடாது என்று அறிவுரையும் திட்டலையும் ஒருசேர கொடுத்து இருப்பதை பார்த்து இனி மைனா மாறிவிடுவார் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications