நான் கஷ்டத்தில் இருக்கும் போது ரச்சிதா எனக்காக வரவில்லை மைனா வருத்தம்..இதுதான் பிரச்சனைக்கு காரணமா?
ரச்சிதாவுக்கும் எனக்கும் ஆறு வருடங்களாக என்ன பிரச்சனை, எதனால் பேசவில்லை என முதல் முறையாக மைனா நந்தினி பேசியிருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு மைனா நந்தினி ரச்சிதாவை குறித்து பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே மைனா நந்தினியும், ரச்சிதா மகாலட்சுமியும் நல்ல தோழிகளாக இருந்து வந்தனர்.
ஆனாலும் சுமார் ஆறு வருடங்களாக இவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கு அதற்கான காரணத்தை பற்றி மைனா பேசியிருக்கிறார்.

சரவணன் மீனாட்சி நட்பு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் கடைசி நேரம் மாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடைசி எலிமினேஷனாக வெளியேறிய மைனா நந்தினி முதல் முறையாக ரச்சிதாவை பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். மகாலட்சுமியும், மைனா நந்தினியும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் அப்போது பல்வேறு பேட்டிகளையும் ஒன்றாக கொடுத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் மைனா ரச்சிதா தனக்கு அதிகமான உதவி செய்து வந்ததாகவும், நான் உடுத்தியிருந்த உடை கூட ரச்சிதா எனக்கு கொடுத்தது தான் என்று கூட பெருமையாக பேசி இருந்தார்.

மைனாவுக்கு கிடைத்த நட்பு
அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய நட்பு அதற்குப் பிறகும் தொடர்ந்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதாவை பார்த்த மைனா நந்தினி பெரிய அளவில் நட்பை தொடரவில்லை. அவரை விடவும் மணிகண்டன், நிவி என பலருடன் நன்றாக பழகிக் கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கூட தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிடைத்த நட்பு என்றால் அது நிவி மற்றும் மணிகண்டனின் நட்பு என்று பெருமையாக பேசி இருந்தார். அந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து கேள்விகளை எழுப்பி கொண்டு இருந்தனர்.

சோகத்தில் துணை நிற்கவில்லையாம்
இந்த நிலையில் முதல் முறையாக அதற்கு மைனா நந்தினி விளக்கம் கொடுத்திருக்கிறார். காரணம் சரவணன் மீனாட்சி சீரியலில் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக தான் இருந்திருக்கிறார்கள். மைனாவை பற்றி முழுவதும் தெரிந்த ஒரு தோழியாக ரச்சிதா இருந்திருக்கிறார். அதே நேரத்தில் ரச்சிதாவுக்கும் மைனா அப்படித்தான் இருந்திருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு மைனா நந்தினியின் வாழ்க்கையில் பல்வேறு சோகங்கள் ஏற்பட்டு இருக்கிறதாம் அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக ரச்சிதா இல்லை. ஒரு சோகம் இருக்கும் போது நாம் ஒருவருடைய அன்பை தேடுவோம், அந்த மாதிரி ஒரு அன்பு எனக்கு அப்போ ரச்சிதா கொடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

மீண்டும் நட்பு வளர்ந்தது
அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் பெரிய அளவில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் நாங்கள் இருவரும் நன்றாகத்தான் இருந்தோம். பழைய மாதிரி இந்த ஆறு வருடங்களுக்குள் எங்களுக்குள் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் அந்த வீட்டிற்குள் பேசி இருந்தேன். அதுபோல எங்கள் இருவருடைய நட்பையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் மீண்டும் வளர செய்தது என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் மைனா இருக்கும்போது ரச்சிதா மைனா மற்றும் ராபர்ட் மாஸ்டர் உடன் சேராமல் இருந்தால் பைனல் போவார் என்று ரச்சிதாவின் கணவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications