பிக்பாஸ்-6..ஜிபி முத்துவை அலேக்காக தூக்கிய போட்டியாளர்கள்..வந்து விழுந்த "வழக்கமான வார்த்தைகள்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் ஜிபி முத்துவின் அலப்பறை தொடங்கி இருக்கிறது.

இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து இருந்தாலும் அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பது ஜி பி முத்து தான்.

அதனாலேயே என்னவோ இவர் எப்போது ஃபார்முக்கு வந்து அவருடைய வழக்கமான தனி ஸ்டைல் பேச்சுகளை பேசுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்தது நடக்க தொடங்கி விட்டது.

20 போட்டியாளர்கள் அறிமுகம்

20 போட்டியாளர்கள் அறிமுகம்

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய தொடங்கி இன்றோடு இரண்டாம் நாள் ஆகி இருக்கின்றது. இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே களம் இறக்கப்பட்டு இருக்கின்றனர். ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருந்தாலும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பிரபமாக ஜி பி முத்து இருந்து வருகிறார். சின்னத்திரை வெள்ளித்திரை நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் தற்போது உருவாக தொடங்கி விட்டனர்.

தனித்திறமையால் பிரபலம்

தனித்திறமையால் பிரபலம்

ஜி பி முத்து டிக் டாக் மற்றும் யூடியூப் சேனல்களில் தன்னுடைய வித்தியாசமான உடல் அசைவு பேச்சு வழக்கு மூலமாக பிரபலமானவர். .இவருடைய நடனத்தை பார்த்து சமூக வலைத்தளத்தில் கலாய்த்தே இவர் பிரபலமடைந்து விட்டார். தன்னுடைய சுக துக்கங்களை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பகிர்ந்து அதனால் பல நெகடிவ் கருத்துக்களை பெற்றாலும் இவர் கண்டு கொள்வதே இல்லை .தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது இவருடைய தீவிரமான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இவரால் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல என்டர்டைன்மென்ட் கிடைக்கும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஜி பி முத்துவை தூக்கிய ராபர்ட் மாஸ்டர்

ஜி பி முத்துவை தூக்கிய ராபர்ட் மாஸ்டர்

இதில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் ஏற்கனவே இந்த வீட்டில் வேலைகளை செய்வதற்கு நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அணிகளுக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அசிம் வாசித்துக் கொண்டிருக்கிறார். அதில், உங்கள் அணி சிறந்த அணியாக மாற்றுவதில் உங்களுக்கான டாஸ்க். ஃபர்ஸ்ட் கிச்சன் அணிக்கான டாஸ்க். ஹவுஸ் மேட்ஸ் கேட்டாள் நீங்கள் ஊட்டியும் விட வேண்டும் அதுபோல வாஷிங் டீம் சொன்னால் நீங்கள் பாத்ரூம் செல்வதற்கு கூட ஹெல்ப் பண்ண வேண்டும் என்று படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஜி பி முத்து அருகில் இருக்கும் பெல்லை தட்டி "ஒன்னுக்கு வருது வாங்க" என்று அழைக்கிறார். உடனே அருகில் இருந்த ராபர்ட் மாஸ்டர் ஜி பி முத்துவை அலேக்காக தூக்கிக்கொண்டு ஓடுகிறார்.

தொடங்கியது ஜி பி முத்துவின் ரகளை

தொடங்கியது ஜி பி முத்துவின் ரகளை

"ஒன்னுக்கு வருது அதுக்கு பிரஸ் பண்ணிட்டா போகணும்" என்று ராபர்ட் மாஸ்டரின் கைகளில் சிக்கியிருக்கும் ஜி பி முத்து கதறிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளில் "கக்கூசு இரண்டு தான் இருக்கு" என்று பேசியது இப்ப வரைக்கும் மீம்ஸ்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது .இந்த நிலையில் இந்த ப்ரோமோ வில் இவர் பேசியதை வைத்து நெட்டிசன்கள் என்ன மாதிரி எல்லாம் கலாய்க்க போகிறார்களோ என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். ஆனாலும் ஆரம்பத்திலே கமல் ,ஜி பி முத்துவிடம் கொஞ்சம் உங்களுடைய வழக்கமான வார்த்தைகளை அடக்கி வாசிங்க என்று அட்வைஸ் கொடுத்திருந்தார். ஆனால் அதெல்லாம் எங்கேயோ பறந்து விட்டது என்று ஜிபி முத்துவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் எங்க தலைவர் ஃபார்முக்கு வந்து விட்டார். இனி யாராலையும் அடக்க முடியாது என்று வேற இவருக்கு திரியேற்றி விட்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+