வெளியேற்றப்பட்ட அசீம் மற்றும் விக்ரமன்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. இணையத்தில் லீக்கான வீடியோ
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் இன்றைய முதல் ப்ரோமோவில் அசீம் மற்றும் விக்ரமனை விளையாட்டில் இருந்து வெளியேற்றி இருக்கின்றனர்.
நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை வெளியேற்ற விட வேண்டும் என்று வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். அதில் இன்று அசீம் மற்றும் விக்ரமன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

போட்டியிலிருந்து வெளியேற்றம்
பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் 19 ஆவது நாள் இன்று தொடங்கி இருக்கின்றது. இதில் முதல் ப்ரோமோவில் அசீம் மற்றும் விக்ரமன் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அசீம் மற்றும் விக்ரம் பொம்மை டாய் ஹவுஸில் கொண்டு செல்லப்படாததால் கடைசி நேரத்தில் பிக் பாஸ் இவர்கள் இருவரையும் விளையாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது. அதுவரைக்கும் ஆட்டம் போட்டு விளையாட்டில் பெரும் பிரச்சனையை செய்து வந்த அசீம் நிலைமை தான் பரிதாபமாக இருக்கிறது என்று பார்ப்பவர்கள் எல்லாம் கருத்து கூறி வருகிறார்கள்.

மணிகண்டனின் இன்னொரு முகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போ வேணாலும் திடீரென சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்து விடுகின்றது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பல பிரச்சனைகள் இந்த சீசனில் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போதைய நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் தொடங்கிய முதல் நாளிலிருந்து பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. அதில் முக்கிய ஆளாக அசீம் இருந்து வருகிறார். முதல் நாள் டாஸ்க் தொடங்கிய போது மணிகண்டன் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டி அனைவரையும் மிரட்டி இருந்தார்.

அசீமின் புது அணி
இதுவரைக்கும் அமைதியாக நிகழ்ச்சியில் பல காமெடிகளை செய்து வந்த அமுதவாணன் நேற்றைய எபிசோட்டில் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டி அசீமுக்கு எதிராக தன்னுடைய குரலை கொடுத்திருந்தார். விக்ரம் மற்றும் அசீம் இடையே நேற்றிலிருந்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது விக்ரமன் பேச்சை அசீம் காது கொடுத்து கேட்டது போல தெரியவில்லை .அது போல அசீம் நேற்றைய எபிசோட்டில் ஷெரினா கீழே விழுந்ததற்கு தனலட்சுமி தான் காரணம் என்று தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக கூறி வருகிறார். அதோடு தன்னுடைய அணியில் மகேஸ்வரி, ஷெரினா, மைனா நந்தினி என ஒரு சிலரை சேர்த்துக் கொண்டு விளையாட்டை விளையாடி வருகிறார்.

விளையாட்டில் இருந்து வெளியேற்றம்
இதில் அசீம் பொம்மையை அசல் வைத்திருக்கிறார். அதுபோல விக்ரமன் பொம்மையை அசீம் வைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் டால் ஹவுஸில் இருக்கும் ஒரு இடத்தில் பொம்மையை வைக்க மாட்டோம் என்று வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இன்று பிக் பாஸ் டால் ஹவுஸில் ஒரு இடம் காலியாக இருக்கிறது .உங்க முடிவு என்ன என்று கேட்டதும் அசல் மற்றும் அசீம் இருவரும் ஃபிலே பிக் பாஸ் என்று கூறுகின்றனர். எல்லோரும் வரிசையில் நில்லுங்கள் என்று பிக் பாஸ் கூறுகிறார். அதைத் தொடர்ந்து உங்களுடைய கையில் யார் பொம்மை இருக்கிறது என்று கேட்டதும், அசல் தன்னுடைய கையில் அசீம் பொம்மை இருக்கிறது என்று கூறுகிறார். அதுபோல அசீம், விக்ரமன் பிக் பாஸ் என்று கூறுகிறார். அசல் மற்றும் அசீம் உங்களுக்கு அறிவிப்பு வந்தும் நீங்கள் முடிவு எடுக்காததால் விக்ரமன் மற்றும் அசீம் இந்த சுற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறனர் என்று கூறுகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications