அந்த நபரிடம் மட்டும் ஏன் இப்படி நடந்துக்கிட்ட? ரச்சிதாவை திட்டிய அவருடைய அம்மா.. இதுதான் காரணமாம்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 80 வது நாளில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று இருக்கிறது.
ரச்சிதாவின் சார்பாக அவருடைய அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.
கடந்த வாரம் ஷிவின் உடன் ரச்சிதா சண்டை போட்டதை பற்றி அவருடைய அம்மா ரச்சிதாவை திட்டியிருக்கிறார்.

அம்மாவின் வருகை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஃப்ரீ செட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் இன்று எபிசோட்டில் ரச்சிதாவின் அம்மாவும் உறவினரும் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். அவர்கள் இடம் நான் எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறேன் என ரச்சிதா கன்னடத்தில் கேட்க அவருடைய அம்மாவும் கன்னடத்திலேயே பதிலை கூறிக் கொண்டிருக்கிறார், ரச்சிதா இந்த வீட்டுக்குள் சரியாக விளையாடிக் கொண்டிருப்பதாகவும் நீ விளையாடும் விதத்தை வைத்து நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் போன் செய்து பாராட்டுகிறார்கள் என்று அவருடைய அம்மா கூறிக் கொண்டிருக்கிறார்.

விளையாட்டு வழிமுறை
ரச்சிதாவின் உறவினர் ரச்சிதாவிடம் நீ எடுத்திருக்கும் வழிமுறைதான் சரியானது. அடுத்தவர்களை கோபப்படுத்தி அவர்களை ட்ரீகர் செய்து அவர்களை அவமானப்படுத்தி நீ ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி செய்யாமல், உன்னுடைய வழியில் நீ சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறாய். எப்படி வெளியேயும் இருக்கிறாயோ, அப்படித்தான் இந்த வீட்டிற்குள் இருக்கிறார். அப்படியே நீ விளையாடு என்று ரச்சிதாவிற்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ரச்சிதாவின் சமையல் குறித்தும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

அம்மாவின் கேள்வியும் அறிவுரையும்
பின்பு கடந்த வாரம் ஷிவினிடம் நீ எதற்காக கோபப்பட்டாய் என்று ரச்சிதாவின் அம்மா கேட்க, என்னால் ஷிவின் என்னை நாமினேஷன் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் அவர் கூறிய காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னிடம் மைனா அமுதவாணன் என எல்லோருமே முகத்துக்கு நேராக காரணங்களை கூறிக் கொண்டிருந்தாலும் அப்போதெல்லாம் கூட எனக்கு கோபம் வரவில்லை. ஆனால் ஷிவின் என்னைப் பற்றி நன்றாக தெரிந்து அவர் அப்படி பேசியதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். உனக்கு நன்றாக தெரிந்த பிடித்த நபர் உன்னிடம் ஒரு குறையை கூறினால் அதை ஏற்றுக் கொள் அதற்காக கோபப்படாதே என்று ரச்சிதாவின் அம்மா ரச்சிதாவை திட்டி இருக்கிறார்.

அம்மாவின் பாராட்டு
பின்பு ரச்சிதாவின் அம்மா தனக்கு ஷிவின் இரண்டாவது மகள் என்றும் ஷிவின் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு தன்னோடு வீட்டிற்கு வர வேண்டும் என்று ரச்சிதாவின் அம்மா சொல்லி கண்கலங்கி ரச்சிதாவின் அம்மாவை கட்டி அணைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். அது மட்டும் அல்லாமல் நேற்றைய எபிசோடில் ஷிவின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வராத நிலையில் இன்று ரட்சிதாவின் அம்மா உச்சி முகர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இந்த வீட்டிற்குள் தனலட்சுமி சரியாக விளையாடி வந்தார் என்றும் தனலட்சுமி பற்றியும் ரச்சிதாவின் அம்மா ரச்சிதாவின் விளையாட்டை பாராட்டி இருக்கிறார். அதே நேரத்தில் ஜனனியை பற்றி ரச்சிதா பெருமையாக பேச அதை குறித்து எந்த பதிலையும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications