வெற்றி பெற்ற அசீமிற்கு கூட இது கிடைக்கவில்லையே... ஆனால் விக்ரமனுக்கு கிடைத்த சப்போர்ட்!?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வின்னராக அசீம் தேர்வாகி இருக்கிறார்.
ரன்னராக யாரும் எதிர்பார்க்காத விதமாக விக்ரமன் தேர்வாகி இருக்கிறார்.
அசீம் வெற்றி பெற்ற பிறகும் அவருடைய வெற்றியை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் விக்ரமன் வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கு தொடர்ந்து அதிகமான ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நழுவிய வெற்றி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் முடிவு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக் பாஸ் கூறும் தாரக மந்திரத்தின் அடிப்படையில் நடைப்பெற்று இருப்பதாக தெரிகிறது. அதிகமான சப்போர்ட் சமூக வலைத்தளத்தில் விக்ரமனுக்கு இருந்தாலும் கடைசி நேரத்தில் அசீமிற்கு டைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பிக் பாஸ் ரசிகர்களின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக நேற்று இரவில் இருந்து அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் பிக்பாஸ் மற்றும் விஜய் டிவியை எதிர்த்து பரவி வருகிறது. இந்த நிலையில் வெற்றி மறுக்கப்பட்டாலும் எங்களுடைய ஆதரவு இருக்கிறது என்பதை விக்ரமனுடைய ரசிகர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.

ரசிகர்களின் ஆதரவு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் சிரித்த முகமாக வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் பலர் பகிர்ந்து அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் அதிகமான ரசிகர்கள் விக்ரமனை நேரடியாக சந்தித்து அவருக்கு மாலை மரியாதையோடு வரவேற்பு ஏற்படுத்தி இருக்கின்றனர். வீட்டிற்க்கே அதிகமான ரசிகர்கள் சென்று அவருக்கு ஆரத்தி எடுத்து அவரை விமர்சனமாக வரவேற்று இருக்கின்றனர். ரோஜா பூ மாலை, செவ்வந்தி பூ மாலை என விதவிதமான மாலைகளோடு விக்ரமனுக்கு பெரிய அளவில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றனர்.

பிரியாணி கொண்டாட்டம்
இந்த நிலையில் இன்று பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் விக்ரமனின் நண்பர்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்கிரமனோடு சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு அதுவும் பீப் பிரியாணி சாப்பிட்டு மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கின்றனர். தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விக்ரமன் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். ஒருவேளை இந்த சீசன் டைட்டில் வின்னராக விக்ரமன் ஆகி இருந்தால் கூட இவ்வளவு பேர் அவருக்கு பாராட்டு தெரிவித்து இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் இவருடைய தோல்வியை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக தெரிகிறது.

விரைவில் பாராட்டு விழா
இந்த நிலையில் விக்ரமனுடைய ரசிகர்கள் பலர் ஒன்று சேர்ந்து விக்ரமனுக்கு பெரிய அளவில் வரவேற்பு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ஆதரவு திரட்டி வருகின்றனர். ரசிகர்கள் அதிகமானோர் தொடர்ந்து இந்த குரூப்பில் சேர்ந்து வருவதால் ஏற்கனவே டைட்டில் ஜெயித்த அசீமிற்கு கூட இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தோற்றாலும் நேர்மையோடு இருந்ததால் விக்ரமனுக்கு அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது என்று தொடர்ந்து கருத்து குவிந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications