பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது இதுதான்... அந்த விஷயத்தை கேட்டு வேதனையாக இருக்கிறது.. குமுறும் ஜனனி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஜனனி தற்போது உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தான் செய்த செயலை வெளியே வந்து பார்த்த பிறகு தவறு என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒரு சில விஷயத்தை வெளியே கேட்டு வேதனையாக இருக்கிறது என மனம் உருகி பேசி இருக்கிறார்.
முதல் முறையாக தனக்கும் அமுதவாணனுக்கும் எந்த மாதிரி உறவு என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அதுதான் மன வேதனை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிய ஜனனி தற்போது பல சேனல்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி அவர் பேசிய வீடியோக்களை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தான் அமுதவாணனோடு பழகுவதை குறித்து பலர் காதல் என்ற வார்த்தைகளை கூறி வருவதை குறித்து கேட்பதற்கே வேதனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவருக்கு எங்க அப்பாவுடைய வயது இருக்கும். அவ்வளவு பெரிய வயது உள்ளவரோடு என்னை தொடர்பு படுத்தி இருக்கிறார்கள். அது மன வேதனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அண்ணன் தானாம்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களில் நான்தான் வயது குறைவான பெண் எனக்கு அமுதவாணன் ஒரு அண்ணன் ஷ்தானத்தில் இருந்து தான் பல அறிவுரைகளை கூறினார். பலரும் முகத்துக்கு நேராக ஒரு பேச்சை பேசி விட்டு முதுகு பின்னாடி வேறு விதமாக பேசுவார்கள் ஆனால் அமுது அப்படி கிடையாது. அதனால் தான் எனக்கு அமுதவனை ஸ்பெஷல் ஆக பிடித்தது. வீட்டில் இருக்கும் ஒரு நபர் போல தான் அவர் என்னிடம் உரிமையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். நான் செய்யும் சிறு சிறு தவறுகளையும் நல்ல விஷயத்தையும் குறிப்பிட்டு எனக்கு அறிவுரை கூறி வந்தார்.

தப்பை தட்டி கேட்பவர்
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமன் யாரு செய்தது தவறு என்றாலும் சரியாக தட்டி கேட்பார். சிலர் அவர் பிரச்சனை முடிந்த பிறகு வந்து அதை தோண்டி கேட்பதாக சொல்கிறார்கள் அப்படியெல்லாம் இல்லை. அதேபோல அவர் யாருக்கும் பாரபட்சமும் காட்டவே மாட்டார். எந்த இடத்தில் தவறு நடந்தாலும் அந்த இடத்தில் யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய கேள்வியை தொடங்கி விடுவார், அதனால் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் அவரை ஒதுக்கி வைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

நான் அப்படி இல்லை
பிக் பாஸ் வீட்டிற்குள் யாருமே உண்மையாக இல்லை அனைவரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் நான் இவ்வளவு நாட்கள் உள்ளே இருந்தது ரசிகர்களால் தான். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் அனைவரிடமும் அண்ணன் அக்கா என்று உறவு வைத்து பேசியதால்தான் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. அதனால் தான் நான் வெளியே வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். நானும் யாரிடமும் எந்த உறவும் வைத்துக் கொள்ளாமல் என்னுடைய விளையாட்டில் கவனத்தை செலுத்தி இருந்தால் நான் கடைசி வரைக்கும் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருப்பேன். உள்ளே நடித்துக் கொண்டிருப்பவர்கள் தான் இருந்து வருகிறார்கள் என்று பேசி இருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications