தகுதி இல்லன்னு யாரு சொன்னது? முதல் இரண்டு இடத்தில் சேவ் ஆக போவது இவர்கள்தான்..நடந்தது என்ன தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது ரேங்கிங் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
அதில் தகுதி இல்லை என்று ஷிவின் மற்றும் விக்ரமனை அசீம் திட்டிக் கொண்டிருக்கிறார் ஆனால் அவர் எதிர்பார்க்காத திருப்பம் நாளை நடைபெற இருக்கிறது.
நாளை எபிசோட்டில் முதல் இரண்டு இடங்களில் சேவ் ஆன விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

ரேங்கிங் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த ஆறாவது சீசன் டிஆர்பி அளவு குறைவாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதனாலேயே ஆரம்பத்தில் நடைபெற்ற அதே ரேங்கிங் டாஸ்க் தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த டாஸ்க் 10 போட்டியாளர்கள் மட்டுமே இப்போது இருக்கும் நிலையில் 10 போட்டி இடங்களுக்கும் போட்டியாளர்களுக்குள் பிரச்சனைகளையும் பூகம்பங்களையும் ஏற்படுத்தும் விதமாக பிக் பாஸ் கொளுத்திப் போட்டு இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற ரேங்கிங் டாஸ்க் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய அசீம் இந்த டாஸ்க்கில் நான் மாறவே இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

கட்டப்பஞ்சாயத்து
ரேங்கிங் டாஸ்க் தொடங்கியதும் முதல் ஆளாக ஓடி வந்து முதல் இடத்தை பிடித்துக் கொண்டு அசீம் அந்த இடத்திற்கு போட்டியிட்டு வரும் போட்டியாளர்களை கண்ணா பின்னா விட திட்டி வருகிறார். குறிப்பாக ஆரம்பத்தில் அமுதவாணனோடு சண்டையிடுகிறார். இவர் எல்லாம் இந்த இரண்டாவது இடத்தில் வந்து நிற்கிறாரே இவருக்கு என்ன தகுதி இருக்கிறது, இவர் இந்த வீட்டிற்குள் என்ன செய்து விட்டார் என்று அவரைத் திட்டிக் கொண்டிருக்க, அடுத்ததாக விக்ரமன், அசீம் இருக்கும் முதல் இடத்தை எனக்கு வேண்டும் என்று கேட்க தொடங்குகிறார். அதற்கு நீங்க என்ன இங்கே வந்து கட்டப்பஞ்சாயத்து பண்றீங்களா என விக்ரமனை அசீமை திட்டிக் கொண்டிருக்கிறார்.

தகுதி இல்லையாம்
ஏற்கனவே விக்ரமை அரசியல்வாதி என்று பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக திட்டியது அசீம் தான். அதே கருத்தில்தான் இப்போதும் விக்ரமனை அரசியல் ரீதியாக கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்று அசீம் திட்டுகிறார் என்று விக்ரமனின் ஆர்மி கருத்துக்களை பறக்க விட, அமுதவாணனுக்கும் அசீமிக்கும் நடைபெற்ற பிரச்சனைக்கு எதற்காக அங்கே விக்ரமன் அதை கூறி முடிந்து போன பிரச்சனையை மீண்டும் தொடங்குகிறார் என்று அசீமின் ரசிகர்கள் எதிர் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஷிவின் தனக்கு முதலிடம் வேண்டுமென்று அசீமிடம் கேட்க உனக்கு இங்கே எந்த இடமும் தகுதி கிடையாது என்று அசீம் திட்டுகிறார்.

நாளை நடைபெறும் ட்விஸ்ட்
இந்த நிலையில் நாளை எபிசோட்டில் முதல் இடத்தில் விக்ரமன் அதைத்தொடர்ந்து ஷிவின் சேவ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்ப வரைக்கும் ஓட்டுக்களின் அடிப்படையில் அசீம் தான் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் அவரை இந்த முறையும் முதலாக செய்வதில்லையாம். ஏற்கனவே இதற்கு முன்பும் இப்படித்தான் அசீம் அதிகமான வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருந்தாலும் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டது போல கமல் அறிவித்திருந்தார். அதுபோலத்தான் தற்போதும் விக்ரமன் முதல் ஆளாகவும் ஷிவின் இரண்டாவதாகவும் சேவ் செய்து ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தான் அசீமை சேவ் செய்ய இருக்கிறார்களாம். இந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக்பாஸில் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் மாற்றங்கள் நடைபெறலாம்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications