பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக நடந்த செயல்.. ஜனனி சொன்ன மாதிரியே அதை செஞ்சிருக்காங்களே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் முறையாக பிக் பாஸ் வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வு நேற்றைய எபிசோட்டில் நடைபெற்றிருக்கிறது.
நேற்று எபிசோட்டில் ஜனனியின் வெளியேற்றம் பலரும் எதிர்பாராததாக இருந்தாலும் அவர் கடைசி நேரத்தில் சொன்னதை எல்லாம் பிக் பாஸ் செய்திருக்கிறார்கள்.

எதிர்பார்க்காத செயல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறுவது சடங்கு சம்பிரதாயமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரம் ஜனனி வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் என்ன காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது. ரசிகர்கள் பலரும் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். பலர் நாமினேஷனில் அமுதவாணனிடம் இவர் டிஸ்கஸ் செய்ததுதான் ஒரு காரணம் என்று கூறுகின்றனர். இன்னும் ஒரு சிலர் ஜனனி இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற இருக்கும்போது ஜனனிக்கு இலங்கையில் இருந்து ஃபேமிலி யாரும் வர முடியாது என்பதால் ஜனனி அனுப்பி விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

இதுதான் முதல் முறையாம்
அதுமட்டுமல்லாமல் சொர்க்கவாசிகள் மற்றும் நகரவாசிகள் டாஸ்க்கில் ஜனனியின் வெற்றி கடைசியில் பொய் என்று நிரூபணம் செய்யப்பட்டதால் அதற்காக ஜனனி வெளியேற்றப்பட்டார் என்றும் ஒரு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர். எனதான் யார் என்ன கருத்து கூறினாலும் ஜனனியின் தீவிரமான ரசிகர்கள் அவருடைய வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் புலம்பி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் ஜனனிக்குமே ஆதரவு கொடுக்கும் விதமாக யாருக்கும் இதுவரைக்கும் இல்லாத வகையில் ஜனனிக்கு பயண வீடியோ ஏழு நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அழ வைத்த வீடியோ
ஜனனி ஆரம்பமான முதல் நாளில் இருந்து துக்கம், சந்தோஷம், சிரிப்பு, காமெடி, கலாய்ப்பு, சண்டை என அனைத்து செயல்களையும் அதில் பதிவு செய்திருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பும்போது எந்த ஒரு எக்ஸ்பிரஷனும் மூகத்தில் காட்டாமல் தன்னுடைய பொருள்களில் எதையெல்லாம் அனுப்ப வேண்டும் என்று தனலட்சுமி மற்றும் சக போட்டியாளர்களிடம் கூறிக்கொண்டு அனைவருக்கும் புன் சிரிப்போடையே டாட்டா காட்டிக்கொண்டு மேடைக்கு வந்த ஜனனி தன்னுடைய பயண வீடியோவை பார்த்ததும் கண் கலங்கி அழுதுவிட்டார். அவர் மட்டுமல்லாமல் அருகில் இருந்த கமலுடைய முகமும் லேசாக மாறியிருந்தது.

அதிகமான நேரத்தில் பயண வீடியோ
இந்த நிலையில் அந்த பயண வீடியோவில் ஷிவின் இருக்கும் கிளிப்ஸ்கள் எதுவுமே வராத வகையில் இருந்தது. காரணம் இதற்கு முன்பு ஷிவினோடு ஜனனிக்கு சண்டை வரும்போது அதில் கேமரா முன்பு ஜனனி பேசியிருந்தாராம். என்னுடைய பயண வீடியோவில் தயவு செய்து ஷிவின் கிளிப்ஸ் வந்துடவே கூடாது என்று கூறியிருந்தாராம். அதை அப்படியே பிக் பாஸ் ஜனனிக்காக செய்திருப்பதாக அவருடைய ரசிகர்கள் கூறியிருக்கின்றனர். சனிக்கிழமை எபிசோடில் ஜனனி விளையாட்டை கமல் குறை சொன்னதை புரிந்து கொள்ளாத ஜனனி டக்கென்று அதற்கு நன்றி கூறி ரொம்பவே சந்தோஷப்பட்டு விட்டார். தன்னை பாராட்டுவதாக அவர் ஆரம்பத்தில் நினைத்து விட்டார் .பின்பு கமல் தெளிவுபடுத்திய பிறகு தான் அவருக்கு தப்பு புரிந்தது. இதனாலையோ என்னவோ ஜனனி வெளியே போகும்போது அவருக்கு அவருடைய பயண வீடியோவை அதிகமான நேரம் ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள் என்றும் சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications