முதலமைச்சரிடம் பாராட்டு வாங்கிய அமுதவாணனின் மகன்.. இதுதான் காரணமாம்?திறமைக்கு எப்போதுமே மதிப்பு தான்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிகள் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அமுதவாணனின் மகன் முதல் முறையாக வந்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அனைவரையும் மிமிக்ரி செய்து தனது தனித்துவத்தை காட்டியிருக்கிறார்.
ஏற்கனவே ஜீ தமிழில் நிகழ்ச்சியில் பெரியாரின் கெட் அப்பில் அமுதவாணனின் மகன் பேசிய வார்த்தைகளை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமுதவாணனின் மகனை பாராட்டி இருக்கிறார். தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

குடும்பத்தினரின் வருகை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் தற்போது நடைபெற்று வரும் ஃப்ரீஸ் டாஸ்க் போட்டியாளர்களின் குடும்பத்தினரின் வருகை தொடங்கி இருக்கின்றது. ஏற்கனவே இரண்டு வருடங்களாக இது எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வந்தனர். அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் இதைத்தான் எதிர்பார்த்து இருந்தனர். தனலட்சுமி கடந்த வாரம் வெளியேறுவதற்கு முன்பு தன்னுடைய அம்மாவை இந்த நிகழ்ச்சிக்கு கூட்டி வந்து விட வேண்டும் என்று அதிகமாக பேசி கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியேறிய பிறகு இந்த டாஸ்க் தொடங்கியது. இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி மூவரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

மனைவி மற்றும் குழந்தைகள்
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மைனாவின் விளையாட்டை குறை கூறி இன்னும் நீ சரியாக விளையாடவில்லை. நீ சரியாக விளையாட வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்து சென்றிருந்தார். அவரை தொடர்ந்து ஷிவின் குடும்பத்தினர் வந்தனர். ஷிவின் ஆசைப்பட்ட மாதிரி அவருடைய அம்மாவும், அக்காவும் வரவில்லை என்றதும் அவருடைய தோழியும் அவருடைய வருங்கால கணவரும் வந்திருக்கிறார் .அவர்களும் போட்டியாளர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் பேசிக்கொண்டு சென்றனர். இவர்களை தொடர்ந்து அமுதவாணனின் குடும்பத்தினர் வந்திருந்தனர். ஏற்கனவே திருமணம் முடிந்தது கூட தெரியாமல் தான் இருந்தது. இந்த நிலையில் அவருடைய மனைவி மற்றும் மூன்று மகன்களை பார்த்ததும் பலர் ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தனர்.

அமுதவாணன் மகனின் செயல்
அமுதவாணனுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். முதலாவது இரட்டையர்கள் பிறந்திருக்கின்றனர். பின்பு ஒரு மகன் தனியாக பிறந்திருக்கிறார். இந்த நிலையில் மூத்த மகன் அமுதவாணனை போலவே மிமிக்ரியில் அசத்தி கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் அசீம், விக்ரமன், ஷிவின் மூவரை பற்றி இமிடேட் செய்து காண்பித்தது தான் ஒரு மணி நேர எபிசோட்டில் காண்பிக்கப்பட்டது. ஆனால் 24 மணி நேரத்தில் இவர் உள்ளே இருக்கும் சக போட்டியாளர்கள் அனைவரை பற்றியும் இமிடேட் செய்திருந்தார். அது மட்டும் அல்லாமல் கமல் பற்றியும் கமல் ஒவ்வொரு வாரமும் பேசுவதை குறித்து அனைவரையும் தன் பாணியிலேயே பேசி மகிழ வைத்திருந்தார்.

மறக்க முடியாத பாராட்டு
அமுதவாணனின் மகனின் திறமையை பார்த்து பலர் பாராட்டி வருகின்றனர். அமுதவாணனுக்கு பதிலாக அவருடைய மகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தால், இன்னும் சுவாரசியமாக இருந்திருக்குமோ என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே அமுதவாணனின் மகன் ஜி தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக கலக்கியிருக்கிறார்.அதிலும் குறிப்பாக இவர் பெரியார் வேடமிட்டு பெரியாரின் கொள்கைகளை பற்றி பேசியிருக்கிறார். அதை பாராட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த குழந்தைகளை கௌரவித்திருந்தார். அந்த வீடியோக்களை தற்போது ரசிகர்கள் பலர் பகிர்ந்து அமுதவாணனின் மகனை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
