கதறி அழுத ரட்சிதா.. தினேஷ் வெளியிட்ட பதிவு ..இந்த ஒரு பதிலை எதிர்பார்க்கலையே ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரட்சிதா நேற்றைய எபிசோடில் கதறி அழுததை குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அவருடைய கணவர் வெளியிட்ட பதிவு அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் நிலையில் தன்னுடைய மனைவியை பற்றி தினேஷ் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

சின்னத்திரை மீனாட்சி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பதினாறு போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் இருக்கின்றனர் .இந்த நிலையில் சின்னத்திரையில் மீனாட்சி என்று செல்லமாக ரசிகர்கள் அழைக்கப்படும் ரட்சிதா மகாலட்சுமியும் ஒரு போட்டியாளராக அறிமுகமானார் .இது சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரட்சிதாவுக்கு சமூக வலைத்தளத்தில் நெகட்டிவ் கருத்துக்களும் அதிகரித்து வருகிறது.

திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் ராபர்ட் மாஸ்டரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திற்குள் ரட்சிதா தான் என்னுடைய கிரஷ் என்று முகத்துக்கு நேராக கூறி இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் இவரோடு எனது பயணம் தொடர வேண்டும் என்று கூறியிருந்தார். இதை கேட்டு அதிர்ச்சியானது ரட்சிதா மட்டுமல்ல அவருடைய ரசிகர்களும் தான். அதற்குப் பிறகு ரட்சிதாவிடம் அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு ராபர்ட் மாஸ்டர் பழகி வருகிறார். இதைக் குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டரை திட்டி தீர்த்து வந்த ரசிகர்கள் நாட்கள் செல்ல செல்ல ரட்சிதாவையும் சேர்த்து திட்ட தொடங்கிவிட்டனர். ராபர்ட் மாஸ்டர் தன்னிடம் என்ன மாதிரி பழகுகிறார் என்பதை ரட்சிதா புரிந்துகொள்ளாமல் இருக்கிறார் எதற்காக இப்படி எல்லாம் செய்கிறார் என்று திட்டி வருகின்றனர்.

மாறி மாறி அழுகை
ரட்சிதா ஏற்கனவே சின்னத்திரை நடிகர் ஆனா தினேஷ் கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களில் இருவருக்கும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வருகின்றனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரட்சிதாவிற்கு ஆரம்ப முதல் தினேஷ் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறி போஸ்ட் வெளியிட்டு வருகிறார். அது மட்டும் அல்லாமல் ரட்சிதா தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால் மீண்டும் நாங்கள் சேர்வோம் என்று ஒரு சில நாட்களுக்கு முன்பு வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று எபிசோட் பிக் பாஸ் தனக்கு ரகசியமாக கொடுக்கப்பட்ட டாஸ்கை பற்றி ரட்சிதா என்னிடம் கூறவில்லையே என்று ராபர்ட் மாஸ்டர் அழுது இருக்கிறார். அதற்கு சமாதானம் கூறி ரட்சிதா எவ்வளவோ முயற்சி செய்தாலும் ராபர்ட் மாஸ்டர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ரட்சிதாவும் தனியாக சென்று அழுது வந்தார்.

தினேஷ் வெளியிட்ட ஆறுதல் பதிவு
ரட்சிதா அழுததை வைத்து சமூக வலைத்தளத்தில் பலரும் ரட்சிதாவை திட்டி வருகின்றனர். இந்த நிலையில் தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதைக் குறித்து ஸ்டோரி ஒன்றை வைத்து இருக்கிறார். ஒரு பெண் அழும் போது அது பொதுவாக ஒரு விஷயத்திற்கு மேலே இருக்காது கோபத்தையும் உணர்ச்சியையும் அவள் நீண்ட காலமாக பதில் அளிப்பதற்காக தான் வைத்திருக்கிறாள் என்று கூறியிருக்கிறார் ரட்சிதாவின் அழுகை அவருடைய கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் என்பது தினேஷ் வெளியிட்ட பதிவு மூலமாக ரசிகர்கள் புரிந்து கொண்டு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications