11முறை நாமினேஷன்,1டிராபி அசீம் வெளியிட்ட முதல் பதிவு..நெட்டிசன்கள் கேட்கும் கேள்வி..குவியும் கருத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முடிவடைந்து இருக்கிறது.
இதில் டைட்டில் வின்னர் ஆக அசீம் தேர்வாகி இருக்கிறார்.
டைட்டில் ஜெயித்த பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 11 முறை நாமினேஷனில் வந்து ஒரு டிராபி வெற்றி பெற்றிருக்கிறேன் என மகிழ்ச்சியாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அசீம் மீது கோபத்தில் இருக்கும் நெட்டிசன்கள் பலர் அவருடைய பதிவிற்கு பல்வேறு கருத்துக்களை நெகட்டிவாக வெளியிட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அசீமுடைய பதிவில் பலர் விக்ரமன் மற்றும் ஷிவினுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

எதிர்பார்க்காத வெற்றி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றோடு முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இவர் டைட்டில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை. இவருக்கு டைட்டில் கொடுத்தால் தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் என்று அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் குவிந்து வந்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பட்ட பிரபலங்களும் அசீமிற்க்கு எதிராக கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அனைத்தையும் தகர்த்தெறிந்து அசீமுடைய ரசிகர்கள் அவருக்கு அதிகமான வாக்குகளை செலுத்தி அவரை வெற்றி அடைய வைத்திருக்கின்றனர்.

ரசிகர்களின் திட்டல்கள்
கோடிக்கணக்கான வாக்குகளை பெற்றிருந்தாலும் இவர் விக்ரமனை விட சொற்ப வாக்குகள் தான் அதிகமாக பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இறுதி கட்டத்தில் இருந்த விக்ரமன், அசீம், ஷிவின் மூவரில் அசீம் ஜெயித்து விட்டாரே என்று ரசிகர்கள் பலர் கோபத்தில் சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்களை அசீமிற்க்கு எதிராகவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும் கமலை திட்டியும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

11 முறை நாமினேஷன்
இந்த நிலையில் முதல் முறையாக தான் வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய டிராபி க்கு முத்தமிட்டபடி அந்த புகைப்படத்தை வெளியிட்டு அசீம் 11 முறை நாமினேஷன், ஒரு டிராபி என்று கேப்ஷனோடு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அசீமுடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில், இது உனக்கே தப்பு என்று தோணலையா நீ பண்றது ?என்று நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர். அதுக்கு அசீமுடைய ரசிகர்கள் இது தான் பூமர்ஸ் கதறல்கள் என்று பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
இன்னும் ஒரு ரசிகர்கள் அசீம், பிக் பாஸ் வீட்டில் பேசியது போல் வெளியில் யாருடனாவது பேசியிருந்தால் அடிபட்டு செத்து இருப்பார். அதே போல் அவர் சகப் போட்டியாளர்கள் அனைவரையும் தரங்கெட்ட வார்த்தைகளால் அவமரியாதையாக பேசியுள்ளார். முதல் வாரமே வெளியேற்றப்பட வேண்டியவரை டைட்டில் வின்னர் என்று அறிவித்திருக்கின்றனர். சமூகம் எங்கு செல்கிறது" என்று கருத்து பதிவிட, அதற்கு இன்னொரு ரசிகர் நம்ம வீட்டுல வந்து பார்த்தா நம்ம லட்சணம் என்னவென்று தெரியும் என்று பதில் கொடுக்க, இன்னொரு ரசிகர் உண்மைதான் வாய் மட்டும் இருந்தால் டைட்டில் வின் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு மூன்று மாதம் ஷோ நடந்திருக்க வேண்டாமே, முதல் வாரத்திலேயே டைட்டில் வின்னர்னு அசீம் என்று கொடுத்து விடலாமே? என்ன ஒரு கேவலமான வேலை பண்ணியிருக்கிறது சேனல், மத்தவங்களோட நம்பிக்கையை உடைத்து இப்படி ஒரு வெற்றி தேவையா? ஷிவின் விக்ரமும் தேவை தகுதியற்றவர் என சேனல் இன்னிக்கு நினைச்சிருச்சி நினைக்கிறேன் பரவாயில்லை, எங்க மனசுல இடம் பிடித்த வெற்றி உங்க ரெண்டு பேருக்கும் மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள். ஷிவின், விக்ரம் என்று அசீமுடைய பதிவிற்கு ரசிகர்கள் கருத்து வெளியிட்டு இருக்கின்றனர். இது தற்போது சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications