Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனலட்சுமியால் எங்களுடைய வாழ்க்கையே நாசமா போச்சு. ..கதறும் டிக் டாக் பிரபலங்கள்.. வெளியான காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 தமிழ் ரியாலிட்டி ஷோவில் இருக்கும் தனலட்சுமி குறித்து அவருடைய பழைய தோழிகளாக இருந்த டிக் டாக் பிரபலங்கள் பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் டிக் டாக் பிரபலமாக இருந்த தனலட்சுமி தற்போது பிக் பாஸ் போட்டியாளராக அனைவருக்கும் பரிச்சயமாகி இருக்கிறார் .இந்த நிலையில் இவர் டிக் டாக் செயலியில் ஆக்டிவாக இருக்கும்போது எங்களை ஏமாற்றிவிட்டார். எங்களுடைய வாழ்க்கையே தனலட்சுமியால் முடிந்து போய்விட்டது என்று டிக் பிரபலங்கள் பேசி வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

 பணம் கொடுத்து தானா

பணம் கொடுத்து தானா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் திறமையின் அடிப்படையில் பலருக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி பணம் கொடுத்து தான் வந்திருப்பார் என்றும் அவரால் எங்களுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது, தனலட்சுமியின் கடந்த கால வாழ்க்கை யாருக்கும் தெரியாது ஆனால் அவர் எங்களை எல்லாம் ஏமாற்றி விட்டார் .தனலட்சுமி அவ்வளவு நல்லவர்க்கிடையாது என்றும் அவரைப் பற்றி பல்வேறு தகவல்களை டிக் டாக் பிரபலமான விஜி மற்றும் பேசி இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் உயிர் தோழிகள்

ஆரம்பத்தில் உயிர் தோழிகள்

டிக் டாக் பிரபலமான விஜி தனலட்சுமிக்கு டிக் டாக் மூலமாகத்தான் அறிமுகமானாராம். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பேசி பின்பு கேர்ள் பெஸ்ட்டியாக மாறும் அளவிற்கு இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம் . அதேபோல விஜியின் உயிர்த்தோழியாக இருந்த பிரியாவும் இவர்களுடைய சேர்ந்து கொண்டாராம் இவர்கள் 3 பேரும் சேர்ந்து பல வீடியோக்களில் டூயட் போட்டு பிரபலமாகி இருக்கின்றனர் .ஆரம்ப காலகட்டத்தில் தனலட்சுமிக்கு குறைவாக பாலோவர்ஸ் இருந்தார்களாம். அதனால் விஜி மற்றும் ப்ரீயா இருவரும் இவரை டேக்ஸ் செய்து டூயட் போட்டு அதிகமாக ஃபாலோவர்ஸ் கிடைப்பதற்காக பல வித்தைகளை கையாண்டிருக்கிறார்களாம்.

கிடைத்தது ஏமாற்றம்தான்

கிடைத்தது ஏமாற்றம்தான்

தனலட்சுமி இவர்கள் இருவரோடு நெருங்கி பழகிக் கொண்டிருந்த நேரத்தில் இவர்களுக்காக டிக் டாக் மூலமாக இவர்களுக்கு அவார்ட் பங்க்ஷன் நடத்துவதாகவும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தனலட்சுமி கூறியதாகவும் தனலட்சுமி சொன்னது பலருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தனலட்சுமிக்கு ஆதரவாக பிரியா மற்றும் விஜி இருவரும் அதிகமாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்களாம். ஆனால் கடைசியில் அந்த வீடியோ பங்க்ஷனை தனலட்சுமி தான் யாருக்கும் தெரியாமல் செய்திருந்தாராம். ஆனால் அதில் விஜிக்கு அவார்டு கிடைக்கவில்லையாம். கூடவே இருந்து நம்ப வைத்து கடைசியில் தனலட்சுமி ஏமாற்றிவிட்டார் என்றும் மாஸ்டர் பிளான் தெரிந்து கொண்டு விட்டேன் அதனால் அவரிடம் இருந்து விலகி விட்டேன் என்று விஜி கூறி இருக்கிறார்.

பெரிய வீடு இருக்கு

பெரிய வீடு இருக்கு

தனலட்சுமியால் நாங்கள் டிக் டாக் மூலமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து விட்டோம். என்னுடைய நம்பரை வீடியோவில் வெளியிட்டு தப்பாக என்னை சித்தரித்து கேவலப்படுத்தி விட்டார் தனலட்சுமி சொல்வது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்வது போல அவருடைய நிஜ குடும்பம் கிடையாது. தனலட்சுமி வசதியான வீட்டு பெண்தான். அவருடைய வீடு பெரிய வீடு அதை நானே அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்து இருக்கிறேன். அவருடைய வீட்டில் கார் எல்லாம் இருக்கிறது ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாமே பொய்யாக சொல்கிறார் என்று விஜி குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

அப்பாவை பற்றி சொன்னது பொய்யா

அப்பாவை பற்றி சொன்னது பொய்யா

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் தன்னுடைய அப்பா சிறு வயதிலேயே தங்களை விட்டு சென்று விட்டதாகவும், அதற்கு பிறகு தன்னுடைய அம்மா தான் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்ததாகவும் தனலட்சுமி கூறி இருந்தாராம். ஆனால் அதுவும் பொய் அவருடைய அப்பாவோட தனலட்சுமி பல வீடியோக்களை எடுத்து இருக்கிறார் என்று விஜி கூறி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் விஜிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் தனலட்சுமி இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி இப்படி வீடியோ வெளியிடுவது தவறு என்றும் கருத்து கூறி வருகிறார்கள் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+