எதிர்காலத்தில் குழந்தை நினைத்து கதறி அழுத ரச்சிதா..இனி "அவர்”தான் உலகமாம்.. மறைமுகமான பதிலா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா தனக்கு எதிர்காலத்தில் குழந்தை இருக்குமா இல்லையா என தெரியாதே என்று கதறி அழுது தன்னுடைய ஆசையையும் கூறி இருக்கிறார்.
தனக்கு இதுவரைக்கும் உறுதுணையாக இருந்த அந்த ஒரு நபர் மட்டும் போதும் என்று உருக்கமாக கண்கலங்கி கதறி அழுத ரச்சிதாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி கடன் செலுத்த கிடைத்த வாய்ப்பு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது கனா காணும் காலங்கள் பள்ளி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் அவர்களை எந்த அளவிற்கு மிஸ் பண்ணுகிறோம் என்பதை குறித்து ஒரு ரிவைண்ட் செய்வதற்காக பிக் பாஸ் வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் பலரும் தங்களுடைய அம்மா அப்பாவை குறித்தும் அவர்களை பற்றி தங்களுடைய மனதில் இருக்கும் பல்வேறு வார்த்தைகளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரச்சிதா பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.

அம்மா அப்பாவின் கேரக்டர்
ரச்சிதாவின் அம்மா படிக்காத காரணத்தினால் தன்னுடைய மகள் படிக்க வேண்டும் என்று அதிகமாக அடிப்பாராம். கழுத்தை நெரித்து சில நேரங்களில் செத்துப் போ என்று கூட சொல்லி இருக்கிறாராம். ஒரே மகளாக இருந்தாலும் ரச்சிதா படிப்பு வரவில்லை என்பதற்காக அதிகமாக அடி வாங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். அதுபோல ரச்சிதா பார்த்து வளர்ந்த விதம் என்றால் அவருடைய அம்மா அப்பாவின் சண்டையாக தான் இருந்திருக்கிறது. ரச்சிதாவின் குடும்பம் ஒரு கூட்டு குடும்பமாக இருப்பதால் அவருக்கு அதிகமாக அவருடைய பெரியப்பா மற்றும் பெரியம்மாவின் குடும்பத்தினர் ஆறுதல் கொடுத்திருக்கின்றனர். அப்பா அந்த அளவிற்கு ரச்சிதாவிற்கு உதவவில்லை என்றாலும் அம்மா ரச்சிதா என்ன செய்தாலும் அவருக்கு சப்போர்ட்டாக இருப்பாராம்.

அம்மாவின் முழு சுதந்திரம்
இப்ப வரைக்கும் ரச்சிதா எத்தனையோ சூட்டிங் சென்று நடித்து வந்தாலும், எந்த இடத்திற்கும் அவருடைய அம்மாவை துணைக்கு கூட்டிட்டு சென்றதே கிடையாதாம். அந்த அளவிற்கு அவருடைய அம்மா இவரை ஒரு ஆண் பிள்ளை போலவே வளர்த்திருந்தாராம். ஆரம்ப காலத்தில் பெண் பிள்ளையாக பிறந்து விட்டாரே என்று கோபமாக இருக்கும்போது ரச்சிதாவிடம் கோபத்தை காட்டிய அதே அம்மா அதற்குப் பிறகு ரச்சிதாவுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவருடைய திறமையை காட்டுவதற்கு இப்ப வரைக்கும் உறுதுணையாக இருந்து வருவதாக நேற்றைய எபிசோடில் உருக்கமாக பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த பதில் ஏமாற்றம்
ரச்சிதா தனக்கு எதிர்காலத்தில் குழந்தை அமைப்பு இருக்குமோ இல்லையோ என்று கூட தெரியாது ஆனால் இப்ப வரைக்கும் எனக்கு குழந்தை எங்க அம்மா தான். நான் இருக்கிற வரைக்கும் பத்திரமாக பார்க்க வேண்டும் என்று கண்கலங்கி கதறி அழுது பேசியிருக்கிறார். அதை குறித்து ரசிகர்கள் பலர் அப்போ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இவருடைய கணவரோடு சேர மாட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ரச்சிதாவிற்கு அவருடைய கணவர் அதிகமான சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பலர் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்து வரும் நிலையில் தற்போது ரச்சிதா பேசிய வீடியோவை பார்த்ததும் பலர் ஏமாற்றத்தில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications