பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. இந்த வாரமும் 2 எவிக்ஷன்! முக்கிய புள்ளியே அவுட்.. யாரு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடைசி வாரமான இந்த வாரத்தில் இரண்டு எவிக்ஷன் நடைபெற்றிருக்கிறது என்றும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது யார் என்பது பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று 95வது நாள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் கடைசி எவிக்ஷன் நடைபெற்று இருக்கிறது.

இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் இன்று பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வெளியேறி இருக்கிறார். அதே நேரத்தில் விஷ்ணு நேரடியாக பைனலுக்கு தேர்வாகி இருப்பதால் மீதமுள்ள ஆறு போட்டியாளர்கள் மட்டும் நாமினேஷனில் இருக்கின்றனர்.
அதனால் இந்த வரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது ரசிகர்கள் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். ஆனால் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதுதான் யூகிக்க முடியாததாக இருந்தது. இப்ப வரைக்கும் வாக்குகளின் அடிப்படையில் மாயா மற்றும் விஜய் வர்மா இருவரும் கடைசி இடத்தில் இருக்கின்றனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரத்தில் பிக் பாஸ் பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. ஆமாங்க இந்த வாரம் வெளியே போனது விசித்திரா மற்றும் விஜய் வர்மா என்று கூறப்படுகிறது. இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் இது விஜய் வர்மாவுக்கு பெரிய அதிர்ச்சி தான். ஏற்கனவே ஒருமுறை விஜய் வர்மா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு பிறகு உள்ளே வந்திருக்கிறார்.
வெளியே உள்ள நிலவரம் அவருக்கு ஏற்கனவே தெரியும். ஆனாலும் இப்போது நடைபெற்ற பணப்பெட்டி டாஸ்கில் அவர் பணத்தை எடுக்காமல் விட்டது அவர் செய்த மிகப்பெரிய தவறு. அதுபோல விசித்திரா ஆரம்பத்தில் இருந்து அதிகமான ரசிகர்களின் சப்போர்ட்டோடு இருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக விசித்திராவிற்கும் தினேஷுக்கும் இடையே ஏற்படும் சண்டை தினேஷின் குடும்ப பிரச்சனையை குறித்து விசித்ரா விமர்சித்து பேசியது,
அதுபோல அர்ச்சனாவோடு நேற்று நடந்த பிரச்சனையில் கூட அர்ச்சனாவின் பர்சனல் விஷயங்களை இழுத்து பேசியது போன்ற சில செயல்கள் விசித்ராவின் மீது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.. அதனால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டாரா என்று கேள்விகளும் எழுகிறது. ஆனால் இப்போ வரைக்கும் வெளியான அன் அபிஷியல் வோட்டிங்கில் அர்ச்சனா முதல் இடத்திலும் அதைத்தொடர்ந்து தினேஷ் அடுத்ததாக மூன்றாவது இடத்தில் விசித்ரா தான் இருந்து வருகிறார்
ஆனால் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டு விட்டார் என்பது அவருக்கு ஓட்டளித்த மக்களுக்கு பெரிய அதிர்ச்சி தான். இது மாயாவை காப்பாற்றுவதற்காக நடந்த சதியா என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதனால் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை வழக்கம் போல கழுவி ஊத்த தான் செய்வார்கள். ஆனாலும் கடைசி நேரத்தில் இந்த வாரம் கமல்ஹாசன் இது குறித்து என்ன மாதிரி சமாளிக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் வசனம் வருமே கருப்பன் குசும்புக்காரன் என்று அதுபோல பிக் பாஸ்ஸும் குசும்புக்காரர் தான் எப்போது எப்படி யாரை வெளியே தூக்குவார் என்று ரசிகர்களால் யூகிக்க முடியாத வகையில் தான் இந்த சீசன் ஒவ்வொரு வாரமும் கடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் தற்போது வெளியான தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விடும். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பெரிய அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் விமர்சனத்தால் மட்டும்தான் இந்த முறை அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications