மாயாவின் அம்மாவை விமர்சித்த நபர்.. சகோதரி கொடுத்த எதிர்பாராத பதிலடி.. சீக்கிரத்தில் இதுதான் நடக்கப் போகிறதாம்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் மாயாவின் அம்மாவை குறித்து நெட்டிசன் ஒருவர் விமர்சித்து கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
அதாவது மாயாவின் சகோதரி வெளியிட்ட பதிவில் தன்னுடைய அம்மா நலமாக இருக்கிறார். சீக்கிரத்தில் டிவியில் எல்லோரையும் சந்திக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.
அதற்கு நெட்டிசன் ஒருவர் இன்னும் மாயாவின் அம்மா சாகவில்லையா என்று கமெண்ட் போட்டு இருக்க அதற்கு மாயாவின் சகோதரி பதிலடி கொடுத்திருக்கிறார். அதோடு சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் இணையத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விவாதிக்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர். அனைவரும் இணையத்தை பயன்படுத்தும் நிலையில் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை பார்க்காதவர்கள் கூட தங்களுடைய செல்போனில் நிகழ்ச்சியை பார்த்து அது குறித்து விமர்சித்து வருவதை பார்க்க முடிகிறது.
அதுவும் சமீப காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்க இதை குறித்து இந்த நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்கள் கூட விமர்சித்து வருகிறார்கள். அதிலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து இந்த நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா கேங் வில்லி ரேஞ்சில் வெளியே காட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
அதிலும் பிரதீப்க்கு மாயா மற்றும் பூர்ணிமா அணியினர் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது பெரிய அளவில் இவர்களுடைய இமேஜை ரசிகர்களின் மத்தியில் உடைத்து விட்டது. அதற்கு பிறகு மாயா மற்றும் பூர்ணிமா என்ன செய்தாலும் பலரும் திட்டிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடந்த டிக்கெட் 2 ஃபினாலே டாஸ்கில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்று வருகிறது அதில் மாயாவிற்கு ஐஸ்வர்யா ராய் கெட்டப் கொடுத்திருக்கும் நிலையில் அதை குறித்தும் அதிகமானோர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் மாயாவின் சகோதரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ரசிகர் ஒருவர் அம்மா எப்படி இருக்கிறார் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு மாயாவின் சகோதரி அம்மா நலமுடன் இருக்கிறார். சீக்கிரத்தில் டிவியில் உங்களை எல்லோரையும் சந்திக்கிறோம் என்று கூறி இருக்கிறார். அப்படியானால் இன்னும் சில நாட்களில் ப்ரிஸ் டாஸ்க் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கமாண்டுக்கு கீழே ரசிகர் ஒருவர் இன்னுமா உங்க அம்மா சாகாமல் இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். அதற்கு மாயாவின் சகோதரி, இந்த வன்மம் தேவையா? எங்களுடைய தாயைப் பற்றி பேசும்போது உன்னுடைய தாயை பற்றி நினைத்துப் பார்த்தாயா? நிகழ்ச்சியில் கெட்டவர்களாக காட்டப்படுபவர்கள் வெளியே நல்லவர்களாக இருக்கலாம்.
உள்ளே நல்லவர்களாக இருப்பவர்கள் வெளியே கேடுகெட்டவர்களாக கூட இருக்கலாம். பிக் பாஸில் 60 கேமராக்களில் பதிவாகி வரும் காட்சிகள் 20% மட்டுமே உண்மை. இதனால் உங்களுடைய வன்மத்தை போட்டியாளர்களுக்கு போடும் ஓட்டுகளில் காண்பியுங்கள் என்று அழுத்தமாக கூறி இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்ன தான் ஒருவர் மீது கோபம் இருந்தாலும் இப்படியா அவருடைய குடும்பத்தினரை இவ்வளவு மோசமாக பேசுவது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாயாவின் விளையாட்டு பிடிக்கவில்லை என்றால் மாயாவை வேண்டும் என்றால் விமர்சிக்கலாம். ஆனால் அவருடைய குடும்பத்தை எப்படி இந்த மாதிரி வார்த்தைகளால் பேச முடியும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications