வீட்டுக்குள் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தையை அம்பலப்படுத்திய கமல்ஹாசன்..இன்றைக்கு குறும்படம் இருக்கு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 28ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இன்று சனிக்கிழமை எபிசோடு என்பதால் இன்று கமல்ஹாசன் தன்னுடைய வாத்தியார் வேலையை பார்க்க வந்திருக்கிறார்.

இந்த நிலையில் முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் ரகசியமாக நடந்த டீலிங் பற்றி போட்டு உடைத்து அதைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக் பாஸ் போட்டியாளர்களும் அதிர்ச்சியாக இருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது ரசிகர்களின் மத்தியில் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் அதிகமான சண்டை சச்சரவுகள் மற்றும் இந்த சீசனும் வழக்கம்போல சீசன் போலவே இருப்பதாக சிலர் கருத்து கூறி வந்திருந்த நிலையில் இப்போது இந்த சீசனில் யார் உண்மையாக இருக்கிறார்.
யார் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று யூகிக்க முடியாத வகையிலேயே எல்லா போட்டியாளர்களும் நடந்து கொண்டிருக்கின்றனர். அதனால் இந்த சீசனையும் டைட்டில் வின்னர் யார் என்று எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் 27 வது நாள் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் கமல்ஹாசன் வருகை தரும் நாள் என்பதால் சுவாரசியமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கமல் மேடைக்கு வந்ததுமே எப்போதும் போல பார்வையாளர்கள் உட்கார்ந்து கொண்டு கைதட்டாமல் இந்த முறை நின்று கொண்டு கமல்ஹாசனின் வருகைய கைதட்டி ஆரவாரத்தோடு வரவேற்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மேடையில் வந்ததும் கமல்ஹாசன் "ஆத்திரத்தோடு எழுந்தவன் நட்டதோடு தான் அமர்வான் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளே நடந்திருக்கு. அதுமட்டுமல்ல பட்டம் உனக்கு பணம் எனக்கு என்று அவங்களே பாக பிரிவினை எல்லாம் பண்ணி இருக்காங்க. அதற்கு முடிவு சொல்ல வேண்டியவங்க நீங்க தான் என்பதை அவங்க மறந்துட்டாங்க. அதை இன்று நாம ஞாபகப்படுத்தனும்" என்று கூறியிருக்கிறார்.
இப்படியாக முதல் ப்ரோமோ வெளியாகி இருக்க நிலையில் அதை தொடர்ந்து அடுத்த ப்ரோமோவில் விஷ்ணு விற்கும் அக்ஷயாவிற்கும் நடந்த பிரச்சனை குறித்து கமல் விவாதிக்கிறார். அப்போது விஷ்ணுவை தள்ளிவிட்டது யார் என்று பார்ப்பதற்காக இன்று குறும்படம் போட்டுக் காட்ட இருக்கிறார்.
இதனால் இன்று சரியான பஞ்சாயத்து காத்திருக்கிறது. ஏற்கனவே இந்த வாரத்தில் அதிகமாக விஷ்ணு பிரச்சனை செய்திருக்கும் நிலையில் அவருக்கு கமல்ஹாசன் டோஸ் விட்டால் சரியாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications