விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதீப்பின் காதலி சொன்ன வார்த்தை.. அப்போ பிரதீப் சொன்னது பொய்யா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் சனிக்கிழமை பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
பிரதீப்பால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக பெண்களின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் கமல்ஹாசன் சேனல் தரப்போடு சேர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த முடிவுக்கு பிரதீப்பின் காதலி தன்னுடைய கருத்தை தெரிவித்து இருப்பதாக பிரபலம் ஒருவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி தான் இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. twitter, facebook, instagram என எந்த பக்கம் போனாலும் அங்கே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கடந்த வாரத்தில் பிரதீப் அதிரடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது பற்றியும் தான் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
அதிலும் பிரதீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பிரதீப்பால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கு ஆபத்து என்று சொன்ன காரணம் ஏற்புடையது இல்லை என்று பலர் கூறி வருகின்றனர். காரணம் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே பலர் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியும், இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை பயன்படுத்தியும் ஜாலியாக இருக்கும் போது பிரதீப் மீது மட்டும் ஏன் சிலர் செங்கொடி தூக்கி குற்றம் சுமத்த வேண்டும்.
அதோடு அவருக்கு மட்டும் எப்படி ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பலாம்? அப்படி என்றால் உள்ளே இருக்கும் இன்னும் ஒரு சிலரையும் வெளியே அனுப்ப வேண்டியது தானே? என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்களும் கமல் செய்த இந்த செயல் தவறானது என்று கூறி வருகிறார்கள்.
அதோடு ஒரு பக்கத்தில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்த்துக் கொண்டிருக்கும் சேனல் தரப்போடு கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பார். அப்போது அங்கே உள்ளே ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது. அதனால் தான் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதும் சிலருடைய பதிலாகவும் இருக்கிறது.
இப்படியாக இருக்கும் நிலையில் பிரதீப் வெளியேற்றம் குறித்து அவருடைய காதலி என்ன சொன்னார் என்பதை பற்றி நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான யுகேந்திரன் சில தகவல்களை கூறி இருக்கிறார். அதாவது இணையத்தில் அதிகமானோர் பிரதீப்க்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நான் கூட பிரதீப்க்கு தான் சப்போர்ட் செய்கிறேன்.
ஆனால் பிரதீப் உடைய காதலி நான் வெளியே வந்து பிறகு என்னிடம் பேசினார். அப்போது பிரதீப் வெளியே வந்தது ரொம்பவே நல்லது என்று கூறினார் என்று யுகேந்திரன் கூறியிருக்கிறார். இப்படியாக இருக்கும் நிலையில் யுகேந்திரன் உட்பட பிரதீப் நலம் விரும்பிகள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் பிரதீப் போகக்கூடாது என்று கருத்து கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று பிரதீப் தன்னுடைய எக்ஸ் தளத்தில் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் வரதா இருந்தால் என் மீது பழி போட்ட இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும். நான் தான் ஏழாவது வார தலைவராகவும் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இப்படியான நிலையில் அப்போ பிரதீப்பின் காதலி பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதை விரும்பவில்லை என்ற போதிலும் பிரதீப் தான் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்வது குறித்து கண்டிஷன் போட்டு இருப்பதால பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரப்போகிறேன் என்ற மாயையை உருவாக்கி விஜய் டிவியையும் கமல்ஹாசனையும் கலாய்க்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications