பிக் பாஸ் 8: திடீரென சௌந்தர்யாவுக்கு முத்தம் கொடுத்த ரஞ்சித்.. கதறி அழுத ஜாக்குலின்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று நடிகர் ரஞ்சித் சௌந்தர்யா நஞ்சுண்டன் நெற்றியில் திடீரென முத்தம் கொடுத்து இருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சவுந்தர்யா அதிர்ச்சியில் இருந்தார். இந்த சம்பவம் இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் நிறைந்தது தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நேற்று நடந்த நிகழ்வுகள் ஒரு பக்கம் சிரிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னொரு பக்கம் என்ன இவங்க இப்படி இறங்கிட்டாங்க என்று சொல்ல வைத்திருந்தது.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் போட்டி போடுகிறார்கள். இவர்களில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று பிக் பாஸ் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதில் அதிகமாக பெண்கள் அணியினர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆண்கள் தரப்பினர் நாமும் கேமரா முன்பு தெரிய வேண்டும் என்பதற்காக மணி கணக்கில் கூட்டம் கூடி ஒரு பிளான் போட்டார்கள்.
அதாவது பெண்கள் எல்லோரையும் நாம பிராங்க் செய்ய வேண்டும் என்று ரவீந்தர் தலைமையில் முடிவெடுக்க அதற்கு வசனம் கதை டைரக்ஷன் எழுதியது எல்லாம் ரஞ்சித் தான். ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே இருந்தது. காரணம் அவர் கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பிறகு அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றும் அவர் அதே மனநிலையில் நடந்து கொள்வாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது. வெளியில் இருக்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் ரஞ்சித்தை இதை வைத்துதான் கிண்டல் செய்து வருகிறார்கள். நேற்று விஜே விஷால் ரஞ்சித் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித் சார் மைண்ட் வாய்ஸ், இந்த வாரம் என்னை நாமினேஷன் செஞ்சது எவன்டா அவனுக்கு நான் எமன்டா என்ற டயலாக் வந்திருக்கும் என்று கிண்டல் செய்திருந்தார்.

அதற்குப் பிறகு பெண்கள் முன்பு நாம சண்டை போடுவது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று ரஞ்சித் சொன்ன கதையை கேட்டு எல்லோரும் சிரித்து இருந்தனர். கடைசியில் அவர்கள் பிளான் போட்டதுபடியே சீரியஸாக நடிக்க அதை உண்மை என்று நம்பிய பெண்கள் இவர்கள் சண்டையை சமாதானம் செய்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டினர். அதில் ஜாக்குலின் ஒருவர். ஆனால் கடைசியில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் பிராங்க் செய்தோம் என்று எல்லோர் முன்பும் உடைத்து விட்டனர்.
பெண்கள் ஏமாந்து போனதை பார்த்து ஏதோ சாதித்தது போல ரஞ்சித் உட்பட ஆண்கள் அணியினர் எல்லோரும் கொண்டாடினர். அந்த நேரத்தில் திடீரென்று ரஞ்சித் ஓடி வந்து சௌந்தர்யா நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு ஜாக்குலின் கன்னத்தையும் செல்லமாக கிள்ளிவிட்டு சென்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜாக்குலின் இவங்க சண்டையை உண்மை என்று நம்பி நான் தீர்த்து வைக்க போனது தப்பா? அப்போ இவங்க என்ன முட்டாள் ஆக்கிட்டாங்க நான் என்ன லூசா என்று கண்கலங்கி அழுது கொண்டு இருந்தார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் சௌந்தர்யா நெற்றியில் ரஞ்சித் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்ஸ்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு ரஞ்சித் செய்தது நாடக அப்பாவா அல்லது நாடகக் காதலா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications