பிக்பாஸை தடை செய்ய வேல்முருகன் சொன்னது சரிதானா? முத்தத்தில் ஆரம்பித்து அரோரா தடவல்! தப்பித்த துஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளுக்கும், முகம் சுளிக்கும் சம்பவங்களுக்கும் பேர் போனதா மாறிட்டு இருக்கு! 'காதல் கன்டென்ட்' கொடுத்தால் அதிக நாட்கள் வீட்டுக்குள்ளே இருக்கலாம்னு பல போட்டியாளர்கள் தவறாகப் புரிஞ்சிட்டு, எல்லை மீறிச் சுத்திட்டு இருக்காங்க போலத் தெரியுது!

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

அரோராவின் காதல் வலை

ஏற்கனவே 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகருக்கு 'மிரர் முத்தம்' கொடுத்த அரோரா, இப்போது இன்னொரு டிராமா மூலமா நெட்டிசன்களோட கிண்டலுக்கு ஆளாகியிருக்காங்க!

கம்ருதீன் அட்ராசிட்டி

முதலில், கம்ருதீன், அரோராவிடம் வந்து, "உனக்காகத்தான் நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்தேன். உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!"ன்னு நூல் விட்டுப் பார்த்தாரு. ஆனா, அரோரா அங்கப் பிடி கொடுக்காமப் பேசிட்டு, தன் டார்கெட்டை துஷார் பக்கம் மாத்திட்டாரு!. துஷார் தன்னிடம் சரியா பேச மாட்டேங்குறார்னு சில பேரைக் கூட்டி வச்சு ஃபீல் பண்ணுன அரோரா, அப்புறம் துஷாரைக் கூட்டிக்கிட்டுப் போய் ரெஸ்ட் ரூம் பக்கத்துல ஒரு இடத்துல உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாரு. தன்னோட வாழ்க்கையில நடந்த சோகங்கள் எல்லாத்தையும் சுருக்கமாச் சொல்லி முடிச்சிட்டு, "எனக்கு எதிர்பார்த்த பையனா நீதான் இருக்கிறாய். எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, நான் என்ன எல்லாம் யோசிக்கிறேனோ, அதேபோல நீ யோசிக்கிற. ரொம்ப நல்ல பையனா இருக்க!"ன்னு புகழ் மழை பொழிஞ்சாரு!

தப்பித்த துஷார்

அரோராவின் இந்த 'ஓவர் டோஸ்' பாசத்தைப் பார்த்த துஷாருக்கு, 'இது ஏதோ தவறாகப் போகுது!'ன்னு புரிஞ்சுபோச்சு!. "நான் அப்படிப்பட்ட பையனா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். நான் ஒரு முடிவெடுத்து அதிலேயே நிலைத்திருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, என்னைத் தாண்டி யாராவது நடந்து போனாக்கூட என்னுடைய மைண்ட் டைவர்ட் ஆகுது. இது தவறான பழக்கம்! இதை நான் மாத்திக்கணும்" என்று, அரோராவிடம் பிடி கொடுக்காமலேயே, எப்படியாவது அந்த இடத்தை விட்டு எழுந்து போய்விடணும்னு போராடிக்கிட்டு இருந்தாரு!

தடவல்

துஷார் எழுந்து நிற்கப் பார்க்கும்போது, அரோரா செய்த வேலைதான் எல்லாரையும் முகம் சுளிக்க வச்சது! அரோரா அவருடைய தொடையைப் பிடித்துத் தடவியபடியே உட்காரச் சொல்ல, "எனக்கு இது சரிப்பட்டு வராது!"ன்னு சொல்லி துஷார் எழுந்து நின்னார்!

அவ்வளவுக்குப் பிறகும் அரோரா விடல! "என் கண்ணைப் பார்த்துப் பேசு!"ன்னு சொல்லி, அவரை அந்த இடத்தை விட்டு நகர விடாமப் பேசிக்கிட்டே இருந்தாரு! துஷார் போகணும்னு சொல்லிக்கிட்டே இருக்க, கடைசியில, "சரி, நீ போ. ஆனா, என்ன ஒரு ஹக் பண்ணிட்டுப் போ!"ன்னு கையை விரிச்சு நின்னார்!

துஷார் இதை நிராகரிச்சு, "இதெல்லாம் இப்போ வேண்டாம். காலையில பேசிக்கலாம்!"னு சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பிட்டாரு!

இது ஆங்கில வெப் சீரிஸா

இந்தக் காட்சிகள், 'கன்டென்ட்' என்ற பெயரில் எல்லை மீறுவது எந்த அளவுக்குப் போயிட்டு இருக்குன்னு காட்டுகிறது. ஒரு பையன் 'எனக்குப் பிடிக்கலை'ன்னு சொன்னாலும், அவனைத் தொட வேண்டும், தடவ வேண்டும்னு கட்டாயப்படுத்துவது சரியா?

ஏற்கனவே, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்படப் பலர், "பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும்" என்றும், "சமூகத்தைச் சீரழிக்கிற மாதிரி அரைகுறை உடையை அணிந்துகொண்டு ஆட்டம் போடுறாங்க" என்றும் எதிர்ப்பு தெரிவிச்சுட்டு வர்றாங்க. அரோரா தொடை தெரிய உடையை உடுத்திக்கிட்டு, எதிர்ல இருந்த துஷார் மீது காலை வைத்துப் பேசிக்கொண்டிருந்த காட்சிகளையும், ஆங்கிலத்திலேயே பேசியதையும் "இது ஆங்கில வெப் சீரிஸ் மாதிரி இருக்கு"ன்னு நெட்டிசன்கள் ட்ரோல் செய்துட்டு இருக்காங்க.

உண்மையிலேயே, ஒரு ரியாலிட்டி ஷோ, அதன் எல்லைகளைத் தாண்டிப் போகும்போது, அதைத் தடை செய்யச் சொல்வது நியாயமான கோரிக்கைதானோன்னு பலர் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க! இனியாவது, 'கன்டென்ட்' என்ற பெயரில் ஆபாசமான விஷயங்களைக் குறைத்துக்கொண்டு, பிக் பாஸ் டீம் தங்கள் பொறுப்பை உணருமா? இல்லை, அடுத்த முற்றுகைப் போராட்டத்துக்காகக் காத்திருக்குமான்னு பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+