Bigg Boss 9 winner: பிக் பாஸ் தமிழ் 9 டைட்டிலை தட்டி தூக்கிய எதிர்பாராத போட்டியாளர்! மக்கள் கணிப்பு பொய்யானது
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்று கிராண்ட் பினாலே ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கு அந்த சூட்டிங் நேற்று முடிவடைந்து இருக்கிறது. அதில் இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. உண்மையிலேயே இந்த சீசன் ஆரம்பத்தில் யாரும் பெரிய எதிர்பார்ப்பு வைக்கல. "பெரிய சினிமா பிரபலங்கள் இல்லையே, கன்டென்ட் வருமா?"ன்னு பலரும் பேசினாங்க. ஆனா போக போக இந்த சீசன் பிக் பாஸ் வரலாற்றிலேயே ரொம்பவே பேசப்பட்ட சீசன்கள்ல ஒன்றா மாறிடுச்சு.
மொத்தம் 20 போட்டியாளர்களோட அக்டோபரில் தொடங்கிய இந்த சீசன்ல, சோஷியல் மீடியா மூலமா பிரபலமானவர்கள்தான் அதிகம். ஆரம்பத்துல மெதுவா போனாலும், வைல்டு கார்டு என்ட்ரியோட கேம் முழுக்க மாறிச்சு. பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் எல்லாம் உள்ளே வந்த பிறகுதான் வீடு சூடுபிடிச்சது.

ஒவ்வொரு வாரமும் எவிக்ஷன், சண்டை, எமோஷனல் எல்லாமே இருந்தது. ஆனா யாருமே எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட் 'டிக்கெட் டூ ஃபினாலே' டாஸ்க்குல நடந்தது. விஜே பார்வதி, கம்ருதீன் இருவருமே டைட்டில் அடிப்பாங்கன்னு கிட்டத்தட்ட எல்லாரும் நினைச்சுட்டிருந்தாங்க. அப்படிப்பட்ட நிலையில், சாண்ட்ராவை கார் டாஸ்க்குல எட்டி உதைத்த சம்பவத்துக்காக ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்துல ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வெளியே அனுப்பிட்டார். பிக் பாஸ் வரலாற்றிலேயே இது ஒரு அரிய சம்பவம்.
அதுக்கப்புறம் கேம் இன்னும் ஓபன் ஆனது. கானா வினோத்தும் டைட்டில் ரேஸ்ல இருப்பார் என பேசப்பட்டவர். ஆனா அவர் பணப்பெட்டியை எடுத்துக்கிட்டு தானே வெளியேறினார். தொடர்ந்து சாண்ட்ராவும் எவிக்ட் ஆன பிறகு, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, விக்கல்ஸ் விக்ரம் - இந்த நாலு பேர்தான் ஃபைனலுக்கு போனாங்க.
நேற்று நடந்த இறுதிச்சுற்று ஷூட்டிங்க்ல முதல்ல நான்காவது இடத்தை விக்கல்ஸ் விக்ரமும், மூன்றாவது இடத்தை அரோராவும் பிடிச்சாங்கன்னு தகவல். அடுத்து ரன்னர் அப் ஆக சபரி. இறுதில, மக்கள் வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் என்ற முடிவு அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
திவ்யாவைப் பொறுத்தவரை, வைல்டு கார்டா உள்ளே வந்தாலும், சில முக்கியமான தருணங்கள்ல எடுத்த ஸ்டாண்ட் அவருக்கு பெரிய ஆதரவா மாறிச்சு. குறிப்பா, டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குல நடந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் நடந்துகொண்ட விதம், "இவங்கதான் ஜெயிப்பாங்க"ன்னு பலரை நம்ப வச்சது. அதனால்தான், தகவல் வெளியான உடனே சோஷியல் மீடியா முழுக்க அவருக்கான வாழ்த்துகள் குவிய ஆரம்பிச்சது.
இதோட, பிக் பாஸ் வரலாற்றுல வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வெல்வது இது இரண்டாவது முறை. ஏழாவது சீசன்ல அர்ச்சனா வென்றதுக்குப் பிறகு, இப்போ அந்த சாதனையை திவ்யா கணேஷ் மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார்.
போன வாரம் முழுக்க இந்த சீசனில் அரோரா தான் டைட்டில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் பினாலேவில் இருக்கும் நான்கு போட்டியாளர்களில் அரோராவிற்க்கு மட்டும்தான் வாக்கு செலுத்த முடிந்தது. இதனால் பிக் பாஸ் டீம் அவரை ஜெயிக்க வைப்பதற்காக முயற்சி செய்கின்றது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தது. ஆனால் கடைசியில் திவ்யா செய்தது கூட பரவாயில்லை என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
மொத்தத்துல சொல்லணும்னா, ஆரம்பத்தில் சோம்பேறி சீசன் போல தெரிஞ்ச பிக் பாஸ் 9, கடைசிவரை ட்விஸ்ட், சர்ச்சை, எமோஷன் எல்லாமே கலந்து, ரசிகர்களை பேசவைத்த சீசனா முடிஞ்சிருக்கு.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications