அடுத்த கண்டெண்ட்க்கு ரெடியான பிக் பாஸ் டாஸ்க்.. "இது அது இல்ல”அப்போ இந்த வாரமும் பஞ்சாயத்து இருக்கு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் வீடு டிவி சேனல் ஆக மாற இருக்கிறது.
ஏற்கனவே இரண்டு வாரம் சண்டை சச்சரவுகள் இருந்த நிலையில் இந்த வாரம் புது பிரச்சனைகள் தொடங்குவதற்கு அடித்தளமாக இந்த டாஸ்க் இருந்து வருகிறது .

டிவி சேனல் டாஸ்க்
பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் இன்று 23 வது நாள் தொடங்கி இருக்கிறது. இந்த வாரத்திற்கான டாஸ்காக பிக் பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் டிவி சேனலாக மாறப்போகிறது. இது ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் ஒரு டாஸ்க்காகத்தான் இருந்து வருகிறது. இந்த டாஸ்க்கில் பலர் மாறி மாறி கேள்வி கேட்டு புது பிரச்சனைகள் தொடங்கும் என்பது எல்லா சீசன்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க் என்டர்டைன்மெண்டுக்கும் சண்டை சச்சரவுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். தற்போது அதே டாஸ்க் இந்த வாரம் தொடங்கி இருப்பதால் இந்த வாரம் வேற லெவலில் களைகட்ட போகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அசீன் ஆட்டம் தொடருமா
கடந்த இரண்டு வாரங்களாக அசீம் டாஸ்க்கில் செய்து வந்த கலவரங்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கமல் அவருக்கு அட்வைஸும், மிரட்டலும், அறிவுரையும் கூறிக் கொண்டிருந்தார். இந்த வாரம் அசீம் நேற்று எபிசோடு முழுக்கவே அமைதியின் சொரூபமாக மாறி இருந்தார் .இரண்டு வாரம் கிடைத்த கண்டிப்பு காரணமாக அசீம் இப்படி மாறிவிட்டார் என்று பலரும் கருத்து கூறி வந்த நிலையில், இன்று புது டாஸ்க் தொடங்கி விட்டதால் இன்று என்ன ஆட்டம் போடப் போகிறார் என்று ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

அமுதவாணன் கூறிய ராசிபலன்
போன வாரம் முழுக்க பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இதில் குறும்படம் போடும் அளவிற்கு பிரச்சனை பூதாகரமாக வெடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி தொடங்கி இருப்பதால், இதில் இரண்டு அணியினராக போட்டியாளர்கள் பிரிந்து இருக்கின்றனர் .சிலர் இந்த டிவி அணியினர், இன்னொருவர் அந்த டிவி அணியினர். அதில் ஒவ்வொரு அணியாக ராசி பலன்கள் சொல்லும் டாஸ்க் ஆரம்பம் ஆகி இருக்கிறது.அதில் இந்த நாள் இனிய நாளாக அமைய என்று அமுதவாணன் தன்னுடைய அல்டிமேட் காமெடி மூலமாக ராசி பலன் கூறி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .

தொடங்கியது தனலட்சுமியின் சவுண்ட்
காலை ப்ரையிம் டைம் ஷோக்காக கிச்சனில் குக்கிங் ஷோ தொகுத்து வழங்க வேண்டும். அதில் மணிகண்டன் மற்றும் மைனா நந்தினி இருவரும் குழந்தைத்தனமாக சமையல் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தொகுப்பாளராக நிவா இருக்கிறார். அடுத்ததாக இந்த டிவி அணியில் இருந்து தனலட்சுமி மற்றும் அசீம் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எதிர்த்து பேசுவதற்காக விக்ரமன் மற்றும் மகேஸ்வரி இருக்கின்றனர். இவர்களில் தனலட்சுமி நீங்க நான்கு பேரும் கலந்துகிட்ட பிரச்சனையை பத்தி மட்டும் தான் நீங்க பேசுறீங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். தனலட்சுமி குரல் அதிகளவில் சவுண்டாக இருப்பதால் இன்று பிரச்சனை தொடங்கி விடும் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications