பாகுபலி படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. லீக்கான புது பிக் பாஸ் வீடியோ.. இது என்ன இப்படி இறங்கிட்டாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவதில் 38 வது நாளாகிய இன்று பிக் பாஸ் வீடு அரசவையாக மாறி இருக்கிறது.

போட்டியாளர்கள் ராஜா ராணி கெட்டப்பிலும் அரசவையில் இருக்கும் காவலர்களின் கெட்டப்பிலும் நாடகத்தை தொடங்கி இருக்கின்றனர்.

புது டாஸ்க் தொடங்கியதும் போட்டியாளர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள்

ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் வீடு அரசவையாக மாறி இருக்கிறது .இதில் பல போட்டியாளர்கள் அனைவரும் அரசவையில் இருப்பது போன்று ஒவ்வொரு கேரக்டராக மாறி இருக்கின்றனர். அதில் ரட்சிதா ராணியாகவும், ஜனனி இளவரசியாகவும், ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும், விக்ரமன் ஆலோசகராகவும், அசீம் படை தளபதி ஆகவும், மணிகண்டன் இளவரசராகவும் மாறி இருக்கின்றனர்.

நேற்றே தொடங்கியது பிரச்சனை

நேற்றே தொடங்கியது பிரச்சனை

நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் யார் யார் என்ன கேரக்டரில் நடிக்க போகிறீர்கள் என்று கேட்டதும் போட்டியாளர்களுக்குள் பிரச்சனைகள் ஏற்பட தொடங்கி விட்டது. குறிப்பாக நிவாஷினி ஆரம்பத்திலிருந்து இளவரசியாக போட்டியிட்டபோது தனக்கு யாரும் ஓட்டளிக்காததால் டாஸ்கிலிருந்து விலகி இருந்தார். கடைசியில் அவருக்கு மியூசியம் காப்பாளர் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல மைனா நந்தினியும் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு கேரக்டருக்காக போட்டியிட்டு கடைசியில் அவரும் பணி பெண்ணாக அமர்த்தப்பட்டு இருக்கின்றார்.

ராஜாவின் சேட்டை

ராஜாவின் சேட்டை

ராபட் மாஸ்டர் மற்றும் ரட்சிதா இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரி போட்டியாளர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கும் விதமாக கலாய்த்து வந்தாலும் வெளியே அவர்களைப் பற்றி அதிகமாக நெகட்டிவ் கருத்துக்கள் பரவி வருகிறது. அதுவும் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறார் என்று பலர் கருத்து கூறிக் கொண்டிருக்கும்போது நேற்றைய எபிசோடில் எனக்கு ராணியின் பக்கத்தில் பெட் தர மாட்டீர்களா? என்று கேட்டிருந்தார். இந்த நிலையில் இன்று ராணி, ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ரட்சிதாவும் கம்பீரமாக நடை நடந்து வருகிறார்கள். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ராபர்ட் மாஸ்டரை பார்க்கும்போது எமதர்ம ராஜா போல தான் இருக்கிறார் என்று கலாய்த்து வருகிறார்கள்.

கேரக்டராக மாறிய அசீம்

கேரக்டராக மாறிய அசீம்

அதுபோல படை தளபதி கெட்டப்பில் இருக்கும் அசீம் அந்த கேரக்டராகவே முழுக்க மாறி இருக்கிறார். அவருடைய நடவடிக்கைகளை ரசிக்கும் ரசிகர்கள் அசீமை அதிகமாக பாராட்டி வருகின்றனர். ராஜ குடும்பத்தை தொட வேண்டும் என்றால் என்னுடைய வாளை தாண்டி தான் தொட வேண்டும் என்று அசீம் பேச லைக்குகள் அதிகரிக்கிறது. அதோடு ரட்சிதாவின் சாப்பாட்டில் ஷிவின் உப்பை கலந்து வைத்து விடுகிறார். அதனால் கோபத்தில் ரட்சிதா படைத்தளபதி.... சாப்பாட்டில் உப்பு மட்டும் தான் இருக்கிறது என்று கூற, அசீம் பொங்கி எழுகிறார். இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கின்றது. ஆனாலும் பலர் இந்த வீடியோவை பார்க்கும் போது காமெடியாக தான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+