மீண்டும் அல்டிமேட்டை பற்றவைக்க கிளம்பி விட்ட வைல்ட் கார்ட் போட்டியாளர்..இனி ஆட்டம் வேற லெவல் தான்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் அறிமுகமாக இருக்கிறார்.
ஏற்கனவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அதே போட்டியாளர் மீண்டும் களம் இறங்குவதால் நிகழ்ச்சி இனி சூடுபிடிக்க போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல் வைல்ட் கார்ட்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யமும் கலவரமும் அதிகமாகவே இருந்துவருகிறது. 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்புவதால் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும் விறுவிறுப்பு குறையவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் 14 போட்டியாளர் அறிமுகமாகி தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கும் நிலையில் தற்போது முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைய இருக்கிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஏற்கனவே பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் நடைபெற்றது போலத்தான் இந்த அல்டிமேட் மேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுவும் ஐந்தாவது சீசனில் ஆரம்பம் முதலே கலக்கி வந்த அபிஷேக் ரசிகர்களால் இரண்டு வாரங்களில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டும் மீண்டும் களம் இறக்கப்பட்டார். ஆனால் மீண்டும் இரண்டு வாரங்களில் நிகழ்ச்சியை விட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மாதிரிதான் தற்போதைய அல்டிமேட் நிகழ்ச்சியிலும வைல்ட் கார்டு போட்டியாளராக அறிமுகமாகும் போட்டியாளரின் நிலைமையும் இருக்குமா என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முதல் எலிமினேஷன்
நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்க்காகவும், நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தால் தான் நாம் ப்ரோமோவில் இடம்பெற முடியும் என்று போட்டியாளர்கள் நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு தான் தற்போது டாஸ்க்குகளில் தங்களுடைய பெர்பாமன்ஸை ஹெவியாக காட்டி வருகின்றனர். அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பற்ற வைக்கிறேன் என்று கூறி நிகழ்ச்சிக்கு விருவிருப்பு ஏற்றி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கும் டென்ஷன் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் முதல் வாரத்தில் நிகழ்ச்சியை விட்டு ரசிகர்களால் சுரேஷ் சக்கரவர்த்தி அனுப்பிவைக்கப்பட்டார்.

விட்ட இடத்தை பிடிப்பாரா
இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி அறிமுகமாக போகிறார் என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பரவி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் யார் அவர் என்று ஆர்வத்தோடு தேடிப்பார்த்து வருகின்றனர். அது சுரேஷ் சக்கரவர்த்திதானாம். அவர்தான் இந்த வாரத்தில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டை தீப்பிடிக்க வைக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நிகழ்ச்சியைப் பற்றி நன்றாக தெரிந்த சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்குவதால் இனி விளையாட்டு வேற லெவல் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications