சினேகனை அதட்டிய கன்னிகா... வெளியே வந்ததும் சந்தோஷமான செய்தி இருக்கு.. ஆனந்த கண்ணீரில் சினேகன்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் சினேகனுக்கு அவருடைய மனைவி அறிவுரை கூறியுள்ளார்.
கன்னிகா கூறிய வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் யாரைப்பற்றி கன்னிகா பொடிவைத்து பேசுகிறாரே என குழப்பம் அடைந்திருக்கின்றனர்.

கன்னிகா பேசிய வார்த்தைகள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்போடு இருந்த இந்த நிகழ்ச்சியை தற்போது 17 ஆவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் பாடலாசிரியர் சினேகன்
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த விளையாட்டை விளையாடி வருகிறார். ஆனால் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லையாம். தற்போது சினேகன் மனைவியான கன்னிகா பேசிய வார்த்தைகள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கண் கலங்கிய சினேகன்
திரைத்துறையின் காதல் தம்பதிகளான கன்னிகா மற்றும் சினேகன் பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிள்ளார் சினேகன். அதுபோல கன்னிகாவும் புது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரிடம் இவருக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் பேசிய வீடியோக்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீடியோவில் தனது மனைவியை பார்த்ததும் சினேகன் கண்கலங்கி அழுதுவிட்டார்.

கன்னிகாவின் கண்டிப்பு
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் கன்னிகா தற்போது பேசிய வார்த்தையை கேட்டதும் அரண்டு போய் இருந்தாலும் அதுவும் சரிதான் என்று கூறிவருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் சினேகன் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கிறார். முதல் சீசனில் இவர் விளையாடிய விதம் பலரையும் கவர்ந்து இருந்தது. அதனால்தான் அவர் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டாவதாக வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மீண்டும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ள சக போட்டியாளர்களிடம் இவர் அன்பு காட்டி வருவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை போல, அதனால்தான் தன்னிடம் பாசத்தை காட்டுவது போல உள்ளே இருப்பவர்கள் யாரிடமும் பாசம் காட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

வெளியே மகிழ்ச்சியான செய்தி
என்னிடம் உங்களுக்கு கிடைக்கும் பாசம் போன்று பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்காது. அதனால் ஏமாற்றம்தான் மிஞ்சும். யாரிடமும் அன்பு அளவுக்கு அதிகமாக காட்ட வேண்டாம். அதை வெளியே வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். உங்களுடைய வேலையில் நீங்கள் கவனமாக இருந்தால் போதும். வெளியே வந்ததும் நீங்கள் சந்தோச படுகிற மாதிரி நான் வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சினேகன் யாரிடம் அதிகமாக பழகுவது பிடிக்கவில்லை என்று கூறுகிறார் என்று ரசிகர்கள் யோசிக்க தொடங்கியிருக்கின்றனர்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications