பிக்பாஸ் அல்டிமேட்: விடாமுயற்சி தான் முக்கியம், நான் விடமாட்டேன்.. அனிதாவை வாயடைக்க வைத்த வனிதா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா பேசியதை கேட்டு சக போட்டியாளர்களும் வாயடைத்து போய் இருக்கின்றனர்.
தன்னோடு போட்டிபோடும் அனைத்து போட்டியாளர்களுக்கும் தனியாளாக வனிதா கெத்து காட்டியிருக்கிறார்.

மீண்டும் வனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்த வரிசையில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரையும் ஆட்டம் காண வைத்த ஒரு போட்டியாளரான வனிதா இதில் அறிமுகமாகியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் வியப்பையும் எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது.

சக போட்டியாளர்களின் குற்றச்சாட்டு
வனிதா அறிமுகமாக போகிறார் என்று சொன்னதுமே அவருடைய ரசிகர்கள் அப்போ இந்த நிகழ்ச்சி களைகட்ட தொடங்கிவிடும், சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறிவந்தனர். வந்த முதல் நாளே தன்னுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை இவர் நிறைவேற்றி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் இதுவரைக்கும் நான்காவது முறையாக அடியெடுத்து வைத்திருப்பதால் தான் தான் வீட்டின் உரிமையாளர் என்பது போல நடந்து வருகிறார் என்பது அனைவருடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

ஆரம்பமே இப்படியா
பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் நாளிலே இந்த வார எலிமினேஷனுக்கானா நாமினேஷன் எடுக்கப்பட்டது. இதில் அதிகமான ஓட்டுகளை பெற்று முதலிடத்தில் வனிதா தான் இருந்து வருகிறார். ஆரம்பமே இவருக்கு எதிராக இருக்கும் நிலையில் இவர் இந்த வீட்டிற்குள் தன்னுடைய ஆட்டத்தை எந்த சூழ்நிலையிலும் குறைக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறாரோ?? என்று பலரும் கூறி வருகிறார்கள் இன்றைய எபிசோடில் இவருக்கு காபி பொடி கொடுக்கவில்லை என்று பிரச்சனைகளை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

தொடங்கிய வாக்குவாதங்கள்
வனிதா தனக்கு காபி கொடுக்கவில்லை என்பதால் டீ தூளை ஒளித்து வைத்துவிட்டார். இது போட்டியாளர்களுக்கு தெரியாத நிலையில் இவரிடம் காப்பி பொடி பிக்பாஸ் தரவில்லை என்று இவர் பேசிக் கொண்டிருக்கும் போது ,அனிதா பிக்பாஸ் தருவதை மட்டும் தான் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அனிதாவுக்கு ஜாடையாக இவர் காரசாரமாக பேச்சை தொடங்கியிருக்கிறார். ஒவ்வொரு சீசனிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒரு சிலர் எங்கள் சீசனில் இது தரவில்லை எங்கள் சீசனில் அது தரவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது நான் விடாமுயற்சியோடு போராடிக்கொண்டு எப்படியும் வாங்கி விடுவேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விடாமுயற்சி முக்கியம் என்று காபி பொடிக்காக காலை வேளையில் கலவரத்தை தொடங்கியிருக்கிறார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications