For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தித்திக்க தித்திக்க சீன பெண்களின் பொங்கலோ பொங்கல்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் சிஆர்ஐ தமிழ் வானொலியின் பெண்கள் தங்களது சோசியல் மீடியாவில் பொங்கல் வாழ்த்துக்களை பொங்கலோ பொங்கல் என்று வீடியோ பதிவிட்டு வாழ்த்துக்களை சொல்லி உள்ளனர்.

பகுதி நேர தமிழ் வானொலியாக செயல்படும் இதன் பணி மகத்தானது என்று சொல்லலாம்.

சைனாவில் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை தமிழ் ஒலிபரப்பு மூலமாக செய்து வரும் இந்த பணியில் தமிழ் பேசும் ரேடியோ ஜாக்கிகள் பலருக்கும் தங்களது குரலால் அறிமுகம் ஆன பெண்கள்.

 பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

இலக்கியா, நிலாநீ,பூங்கோதை மூவரும் தமிழகத்தில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி உள்ளனர். இன்னிக்கு எல்லாரும் பொங்கல் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறோம்... தெருக்களில் கலர் கோலங்கள் போட்டு இருப்பார்கள். ஊரே விழாக்கோலம் பூண்டு இருக்கும் என்று பேசினார்கள்.

Chithi 2 Serial: சித்தி 2... ராதிகாவை கொண்டாட ஆரம்பித்த சன் டிவி!Chithi 2 Serial: சித்தி 2... ராதிகாவை கொண்டாட ஆரம்பித்த சன் டிவி!

 உற்சாகம் பொங்குது

உற்சாகம் பொங்குது

பொங்கல் விழாவை நினைக்கும்போது உற்சாகம் பொங்குது.. இயக்கைக்கும் பசுவுக்கும் எடுக்கும் விழா இது என்று அழகாக தமிழ் பேசினார்கள். என்னோட உற்சாகத்துக்கு இன்னொரு காரணமும் உள்ளது என்று சொன்ன ஒரு பெண், இதுவரை பொங்கல் சாப்பிட்டுத்தான் இருக்கிறேன். முதன் முறையாக பொங்கல் சமைத்துள்ளேன் என்று கூறி மற்ற இருவருக்கும் சாப்பிட கொடுத்தார்.

 சீன புத்தாண்டு

சீன புத்தாண்டு

சீன புத்தாண்டுக்கு முதல் நாள் சூசி கொண்டாடப் படுகிறது. அதுவும் போகி பண்டிகை போன்றுதான், பழையன கழிதல் புதியன புகுதல் என்பது போலத்தான் என்று சொன்னார் ஒரு பெண். பிறகு அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொன்னார்கள்.

 சுடிதார் உடை

சுடிதார் உடை

மூன்று பெண்களும் சுடிதார் உடுத்தி இருந்தார்கள். டேபிள் மேல் கரும்பு, சர்க்கரை பொங்கல் இருந்தது. இவர்கள் பேசிய தமிழ் எளிதாக புரிந்தது.இந்த சீனப் பெண்களின் வாயில் இருந்து பொங்கலோ பொங்கல் என்று கேட்கையில் சர்க்கரை பொங்கல் போல தித்திக்கத்தான் செய்கிறது.

English summary
Women of China's CRI Tamil Radio posted a video greeting Pongalo Pongal on their social media. Its part mission as a part-time Tamil radio is immense. Many Tamil-speaking radio jockeys are women who have been introduced by their voice in this work through Tamil broadcasting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X