For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Chithi serial: கண்ணின் மணி.. கண்ணின் மணி.. மறக்க முடியாத சித்தி.. அடடா 22 வருஷம் ஆகிப் போச்சே!

Google Oneindia Tamil News

சென்னை: 9.30 மணி ஆயிருச்சுன்னா ஊரு ஜனமெல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு வந்து டிவி முன்பு குந்தும்.. கண்ணின் மணி.. கண்ணின் மணி என்ற பாட்டு ஆரம்பித்ததும் அப்படி ஒரு புல்லரிப்பு உண்டாகும். அந்த அளவுக்கு மக்களை வசியம் செய்து கட்டிப் போட்ட சீரியல்தான் சித்தி.

ஆமாங்க.. அந்த சித்திக்கு இன்று வயது 22.. அதாவது சித்தி தொடரின் முதல் எபிசோட் ஒளிபரப்பா நாள் இன்று. 1999ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி தொடங்கி 2001ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி முடிவுக்கு வந்தது சித்தி தொடர்.

தமிழ் டிவி உலகின் மறக்க முடியாத நெடுந்தொடர்களில் சித்திக்கு மிக முக்கிய இடம் உண்டு. ராதிகா, சிவக்குமார் ஆகியோரின் பண்பட்ட நடிப்பு, பாடல், கதையம்சம், கேரக்டர்கள், ஒளிப்பதிவு என பல கோணங்களில் இந்தத் தொடர் இன்று வரை பெஸ்ட்டான தொடராக உள்ளது என்றால் மறுக்க முடியாது.

ஸ்டார் காஸ்ட் சீரியல்

மிகப் பெரிய ஸ்டார் காஸ்ட் சித்தி தொடரில் இருந்தது. தீபா வெங்கட்டின் சிறந்த நடிப்பை மக்கள் இதில் பார்த்து மகிழ்ந்தனர். அதே போல அஞ்சுவின் அசத்தல் நடிப்பையும் யாராலும் மறக்க முடியாது. யுவராணி கேரக்டர் இன்று வரை மறக்க முடியாத ஒன்று.

சுபலேகா சுதாகர்

சுபலேகா சுதாகர்

சுபேலகா சுதாகருக்கு மிகப் பெரிய ஓப்பனிங் கொடுத்த தொடர் என்றால் அது சித்திதான். இந்தத் தொடருக்குப் பின்னர் அவர் மிக மிக பிசியான டிவி நடிகராகி விட்டார். பல பெரிய தொடர்களிலும் நடித்து அசத்தினார்.

பூவிலங்கு மோகன்

பூவிலங்கு மோகன்

அதேபோலத்தான் பூவிலங்கு மோகன், விஜய் ஆதிராஜ், தாரிகா ஆகியோருக்கும் சித்தி மிகப் பெரிய பிரேக்காக அமைந்தது. சித்தி தொடரில் நடித்த அத்தனை பேருக்கும் மறக்க முடியாத அனுபவத்தையும், பிரேக்கையும் கொடுத்த தொடர் என்று கூட கூறலாம்.

ஸ்டார் இயக்குநர்

ஸ்டார் இயக்குநர்

சி.ஜே. பாஸ்கருக்கு மிகப் பெரிய ஸ்டார் இயக்குநர் அந்தஸ்தும் சித்தி தொடருக்குப் பின்னர்தான் கிடைத்தது. இசையமைப்பாளர் தீனாவை பெரிய திரையுலகம் திரும்பிப் பார்க்க இந்த தொடரின் டைட்டில் பாடல் கண்ணின் மணிதான் முக்கியக் காரணம். வைரமுத்துவின் அருமையான வரிகளில் அமைந்த பாடல் இது.

முதல் ரேட்டிங் தொடர்

டிவி தொடர்களிலேயே மிகப் பெரிய ரேட்டிங் வாங்கிய முதல் தொடர் சித்திதான். கடல் கடந்து பல நாடுகளிலும் இந்தத் தொடர் மிகப் பிரபலமானது. இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பிராந்திய மொழி தொடர் என்ற பெருமையும் சித்திக்கு மட்டுமே உண்டு.

English summary
Come on .. That chithi is 22 years old today, ie the first episode of the Siddhi series airing today. The Siddhi series began on December 20, 1999 and ended on November 2, 2001.chithi is one of the most memorable episodes in the world of Tamil TV. Radhika and Sivakumar's rich acting, song, storyline, characters and cinematography are among the best in the series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X