பல புதுமுகங்களுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 3...அஸ்வினுக்கு பதிலாக சன்டிவி ஹீரோவா??
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விவரம் வெளிவந்துள்ளது.
Recommended Video
இந்த மூன்றாவது சீஸனில் அதிகமான போட்டியாளர்கள் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர்.
விஜய் டிவி, சன் டிவி என பிரபலமான நடிகர் நடிகைகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

மாற்றம் கொடுக்கும் நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒருசில ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் வாழ்க்கையும் வேற லெவலில் வளர்ச்சி அடைகிறது. அந்த வகையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தான் தற்போது இரண்டு சீசன்கள் முடிவடைந்து, மூன்றாவது சீசன் தொடங்க இருக்கின்றது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனிலும் தங்களுடைய திரைத்துறை வாழ்க்கையில் முன்னேற்றத்தை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.

மனம் கவர்ந்த போட்டியாளர்கள்
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு பல போட்டியாளர்களின் வாழ்க்கை எப்படியோ இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலருடைய வாழ்க்கை டாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் இதில் கலந்து கொள்வதற்காக போட்டியாளர்கள் இடம் தற்போது ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருப்பதால் தான் நிகழ்ச்சிக்கு அதிக அளவில் வரவேற்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் மனம் கவர்ந்த போட்டியாளராக ஒரு சிலர் இருக்கின்றனர்.

போட்டியாளர்களின் விவரம்
தற்போது மூன்றாவது சீஸனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒருசில போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது நம்பத்தகுந்த வகையில் வெளியாகி இருக்கின்றது. அந்த வகையில் முதல் ஆளாக பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான ரோஷ்னி ஹரிப்ரியன் இந்த நிகழ்ச்சியில் ஒரு குக் கலந்துகொள்ள இருக்கிறார். அவரைத் தொடர்ந்து செந்தூரப்பூவே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநிதி கலந்து கொள்கிறார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி சீரியலின் கதாநாயகன் நந்தன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த செய்தியை கேட்டதும் பலர் அஸ்வினுக்கு பதிலாக நந்தனா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

புதிய கோமாளிகள்
அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை, வெள்ளித்திரை என தன்னுடைய காமெடி திறமையால் அனைத்திலும் கலக்கி வரும் மனோபாலா இதில் கலந்து கொள்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. அவரை தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி, அமீர், ஐஸ்வர்யா பாஸ்கர், அசுரன் படத்தில் பிளாஷ்பேக்கில் வந்த அம்மு ஆகியோர் இருக்கின்றனர் என்று செய்திகள் வைரலாகி வருகின்றனர். அதைப்போல கோமாளி லிஸ்டில் புதியதாக பரத் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மூக்குத்தி முருகன் சூப்பர் சிங்கரில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று செய்திகள் பரவி வருகின்றது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications