குக் வித் கோமாளியில் அறிமுகமாகும் நாட்டுப்புற கலைஞர்...இனி பாட்டுக்கும் பஞ்சம் இல்லை
சென்னை: விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர் அறிமுகமாக இருக்கிறார்.
இதுவரைக்கும் காமெடிக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இனி இவருடைய பாட்டை கேட்பதற்காகவும் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கலகலப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் பல ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து விடுகிறது. ரியாலிட்டி ஷோக்கள் சீரியலுக்கு மாற்றாக இருந்தால்தான் ரசிகர்களை கவரும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அந்த வகையில் பல அழுகாச்சி சீரியல்களை பார்த்து துயரத்தில் இருந்த ரசிகர்களுக்கு மாற்றாக வந்தது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் கலகலப்பு ரசிகர்களை கவர்ந்து விட்டது. அதனால் தொடர்ந்து இரண்டு சீசன்களில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அசர வைக்கும் திறமை
இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதில் ஒருவராக அந்தோணிதாசன் எனும் நாட்டுப்புற இசைக் கலைஞர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இவர் சினிமாவில் பல ஹிட்டான பாடல்களை பாடியுள்ளார். இவர் தஞ்சையில் உள்ள ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர். ஒரு பாரம்பரியமான இசைக் கலைஞர் குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவர் எந்த ஒரு முறையான பயிற்சியும் பெறாவிட்டாலும், தன்னுடைய திறமையால் பாடலில் மூலமாக உலகமே தன்னுடைய பாடலை பாட செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன், விஷால் சந்திரசேகர், சீன் ரோல்டன், அனிருத், ஹிப் ஹாப் தமிழா போன்ற முன்னணி பிரபலங்களுடன் பாடல்களை இசைத்தும், பாடியும் உள்ளார்.

வியக்க வைக்கும் விருதுகள்
இவர் திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற திண்டுக்கல்லு திண்டுக்கல்லு, சூது கவ்வும் திரைப்படத்தில் இடம்பெற்ற காசு..பணம்..துட்டு..மணி..மணி, மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இடம்பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் பாடல்கள் என பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எட்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருதை வென்றுள்ளார். 2014 இல் இவருக்கு நாட்டுப்புறத்தில் சின்னம் என்று அங்கீகாரம் உட்பட தமிழ் சினிமாவின் நம்பிக்கை விருது வழங்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் வேறு பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
Recommended Video

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இதற்கு முந்தைய சீசன்களில் கலகலப்புக்கும், கலாட்டாவுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பது போல இந்த சீசனிலும் இவருடைய காமெடியான பேச்சும் அதோடு சேர்ந்த இவருடைய கலக்கலான பாடல்களும் நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தான் பாடும் பாடல்களில் கவுரவ தோற்றத்தில் தோன்றி இவருடைய உருவத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தாலும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக மேலும் இவருக்கு புகழ் கிடைக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications