CWC பிரச்சனை டிஆர்பிக்காக பண்ணுனது.. அந்த வீடியோவால் நல்ல சம்பாதிச்சுட்டாங்க! சரத் கிண்டல்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை குறித்து அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் சரத்திடம் கேட்ட கேள்விக்கு, அவங்க வீடியோ வெளியிட்டு நல்லா சம்பாதிச்சுட்டாங்க.. நான் இப்போ ஏதாவது சொன்னா என்னை சொம்புன்னு சொல்லுவாங்க என்று மணிமேகலைக்கு எதிராக பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
கடந்த ஒரு வாரம் முழுக்க மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை தான் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. மணிமேகலைக்கு ஆதரவாக பல ரசிகர்கள் பிரியங்காவை திட்டி வருகிறார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியே வந்துவிட்டேன் அதற்கு காரணம் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் என்னை வேலை செய்ய விடாமல் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும்தான் திறமைசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர் தன்னை பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு இருப்பதால் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் எனக்கு தன்மானம் முக்கியம் என்று பெரிய ஒரு பதிவை மணிமேகலை வெளியிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பிரியங்காவை பலர் திட்டி வருவதால் விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். ஆனால் கடந்த வாரத்தில் மணிமேகலை தனக்கு எதிராக பேசியவர்களை தாக்கும் வகையில் சொம்பு என்று கிண்டல் செய்து மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுவும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சரத்திடம் செய்தியாளர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே இருக்கும் பிரச்சனையை பற்றி என்ன நினைக்கிறீங்க? நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கிறீங்க அங்கு என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்குமே என்று கேட்ட, அதற்கு சரத் நான் இப்போ எதையும் சொல்ல விரும்பல. இது நாட்டுக்கு பெரிய முக்கியமான விஷயமே கிடையாது.

அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டது அவங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் அவங்க வீடியோ வெளியிட்டு நல்லா காசு சம்பாதிச்சுட்டாங்க. அதை பார்த்துட்டு இருக்க நீங்களும் நானும் தான் ஏமாளி. அவங்களால பல பேர் வீடியோ வெளியிட்டு காசு சம்பாதிச்சிட்டு இருக்காங்க. அதுவும் உண்மை. இதை பற்றி நாம் ஏதாவது கருத்து சொன்னா நம்மள சொம்பு என்று சொல்லுவாங்க. ஒருவேளை அவங்களோட தனிப்பட்ட டிஆர்பி அதிகரிப்பதற்காக கூட இப்படி இப்ப வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது நம்மை மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைத்து, நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காக கூட இந்த மாதிரி எல்லாம் பேசி இருக்கலாம் என்று மணிமேகலையின் பெயரை சொல்லாமலேயே சரத் பேசியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் சரத் விஜய் டிவி வாய்ப்புக்காக மணிமேகலையை தாழ்த்தி இப்படி பேசுகிறார் என்று அவரை திட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள். பிரியங்காவின் ரசிகர்கள் சரத் சொல்வது தான் சரி என்று அவருக்கு நன்றி சொல்லியும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications