மகிழ்ச்சியான செய்தியை சொன்ன சிவாங்கி...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை: இலை மறையாக சிவாங்கி சொன்ன செய்தியைக் கேட்டு ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர்.
இந்த செய்திக்காக தானே இத்தனை நாட்கள் காத்து இருந்தோம் என்று ரசிகர்கள் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் எப்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது.

ரசிகர்களின் செல்லப்பிள்ளை
விஜய் டிவியின் செல்லக் குழந்தையாக அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வளர்ந்த குழந்தையாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்ததும் ரசிகர்கள் சூம் பண்ணி பார்த்து நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். இந்த மகிழ்ச்சியான செய்தி எங்களுக்கு கொண்டாட்டம்தான் என்று கொண்டாடி வருகின்றனர். ஒரு சில ரசிகர்களுக்கு என்னவென்று தெரியவில்லை. தெளிவாக சொல்லுங்களேன் என்று குழப்பத்தோடு கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்றாவது சீசன் தொடங்கப் போகிறது என்ற செய்தி சந்தோசம்தான் கொடுக்கும்.

புகழடைந்த போட்டியாளர்கள்
கடந்த இரண்டு சீசன்களிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விட்டனர். அதற்கு முன்பு அவர்களுக்குள் இருந்த திறமையை பலர் அறிந்து கொள்ளாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலமாக அவர்கள் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறார்கள். அதில் சிவாங்கி, புகழ், அஸ்வின் என பலர் பெயரை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது.

சீரியலுக்கு மாற்று நிகழ்ச்சி
சின்னத்திரை என்றாலே வேண்டாம் என்று சொல்லும் ரசிகர்களும் கூட இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நன்றாக ரசித்து வருகின்றனர். காரணம் இதில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருவது தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக இருந்து பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் செமையாக கலக்கி விட்டது. எப்போது மூன்றாவது சீசன் வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் காத்திருந்தனர். பலர் தங்களுடைய கவலைகளை மறந்து சிரிப்பது இந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று கூறிவந்தனர்.

சிவாங்கியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
சிவாங்கி ஒரு பாடகியாக இந்த விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகமாகி இருந்தாலும் அதில் எல்லாம் இவருக்கு கிடைக்காத பெரும் புகழையும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் வாங்கி கொடுத்தது. அதனால் மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை தன்னுடைய ஸ்டோரில் மறைமுகமாக வைத்துள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள் ஆட்டத்தை தொடங்கியாச்சா, எப்போது நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்று ஆர்வத்தோடு கேட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த சீசனில் புகழ் கலந்துகொள்வது சந்தேகம் என்று கூறியிருந்ததால் பல ரசிகர்களும் புகழ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா? ?என்றுதான் கேட்டு வருகிறார்கள்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications