குக் வித் கோமாளி சீசன் 5: இணைந்தது தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் மட்டுமல்ல..யாரெல்லாம் தெரியுமா?
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன் முடிவடைந்து இருந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இது குறித்து அப்டேட் இத்தனை நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று விஜய் டிவியில் அதிகாரப்பூர்வமாக குக் வித கோமாளி நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை
வெளியிட்டு இருக்கிறது.
இந்த சீசனில் நடுவர்கள் இயக்குனர் தயாரிப்பாளர் என அடுத்தடுத்து பலர் வெளியேறி இருந்ததால் நிகழ்ச்சி நடக்குமா? இல்லையா? என்ற குழப்பத்திலேயே ரசிகர்கள் இருந்த நிலையில் நேற்று வெளியான ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சமே இல்லாமல் ரசிகர்கள் மனம் கவரும் வகையில் சின்ன சின்ன காமெடிகளும் லூட்டிகளும் இடம் பிடித்திருக்கும். அதோடு கோமாளிகள் மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களும் சேட்டைகளும் செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரைக்கும் நான்கு சீசன்களாக தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு நடுவர்களாக இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் தான் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனிலிருந்து வெளியேறப் போறேன் என்று சொல்லி இருந்தார். அதோடு தன்னோடு தாமுவும் வந்து விடுவார் என்று சொல்லி இருந்தார். ஆனால் அந்த வீடியோவை பிறகு டெலிட் செய்து விட்டார். இதனால் தாமு வெளியேற போகிறாரா? இல்லையா? என்பது பெரிய குழப்பமாக இருந்தது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இயக்குனர் என அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக தொடங்குமா? என்பது பெரிய கேள்வியாகவும் ரசிகர்கள் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் நடுவராக மாதம் பட்டி ரங்கராஜன் கலந்து கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.
அதற்கு பிறகு ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க தொடங்கி விட்டார்கள். இப்படியான நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவியில் அதிகாரப்பூர்வமாக ப்ரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பிளைட்டில் இருந்து செஃப் தாமு இறங்கி குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் தொடங்கப்போகிறது என்பதை உறுதிப்படுத்தி இருந்தார். அதோடு சிங்கம் சிங்கிளா தான் வரும். ஆனால் நான் செஃப் அதனால் பார்ட்னர் ரோடு தான் வருவேன். பார்ட்னர் வாங்க என்று சொல்ல அந்த ஃபிளைட்டில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜன் கெத்தாக களம் இறங்கி இருக்கிறார். இந்த ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் தொடர்ச்சியாக நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் புதியதாக தொடங்கி இருக்கும் கூட்டணிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த கூட்டணியில் புதியதாக இணைந்தது நடுவர்கள் மட்டுமல்ல ப்ரொடக்ஷன் ஹவுஸம்தான்.
இந்த நிகழ்ச்சியை பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ப்ரொடக்ஷன் செய்து இருக்கிறது.. ஏற்கனவே இந்த நிறுவனம் விஜய் டிவியில் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு மற்றும் ராஜு வீட்ல பார்ட்டி” என்ற நிகழ்ச்சியையும் ப்ரொடக்ஷன் செய்து இருந்தது. இந்த நிலையில் எல்லாமே புது கூட்டணியாக இருக்கும் நிலையில் பழைய கோமாளிகள் இதில் இடம் பிடிப்பார்களா? அல்லது புதிய கோமாளிகள் களம் இறங்குவார்களா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதுபோல இந்த சீசனில் எந்த குக் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்றும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் அது குறித்த தகவல்கள் இன்னும் சில நாட்களில் தெரிய வந்துவிடும். அதே நேரத்தில் இந்த ப்ரோமோ வெளியானதும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பயர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பலருடைய மனதை கவர்ந்த குரோஷி புது நடுவர் மற்றும் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications