Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழில் காணாமல் போன தெய்வம் தந்த வீடு சீரியல் கதாநாயகி தற்போதைய நிலை... இப்படி மாறிவிட்டாரே!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலின் சீதாவாக நடித்த மேக்னா தற்போது வெளியிட்ட புகைப்படம் பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

பல வருடங்களாக தமிழ் சீரியலை விட்டு விலகிய மேக்னா அவருடைய சொந்த மொழியான மலையாள சீரியலில் நடித்து வருகிறார்.

மீண்டும் மேக்னாவின் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலர் எப்போது தமிழ் சீரியலுக்கு வருவார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கயல் திரைப்படத்தில் அறிமுகம்

கயல் திரைப்படத்தில் அறிமுகம்

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா .இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது .இவர் தமிழை போலவே மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
அதன்பிறகு இவர் தமிழில் வெளியான கயல் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார் .

காதல் திருமணம்

காதல் திருமணம்

தமிழ் மலையாளம் என மாறி மாறி சீரியல்களில் நடித்து வரும் இவர் டான் டோனி என்பவரை காதலித்து வந்தார்.இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர் பின்னர் சம்மதித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு 2011 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது இவர்களின் திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள் நடிகைகள் சின்னத்திரையில் இவர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் அனைவரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

திடீர் விவாகரத்து

திடீர் விவாகரத்து

ஆனால் இவர்களின் திருமணம் வாழ்க்கை ரொம்ப நாட்களுக்கு நிலைக்கவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது கணவரும் அவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.பின்னர் இவர்களுக்குள் இடைவெளி அதிகமாக ஆரம்பித்ததால் விவாகரத்து வரைக்கும் கொண்டுசென்றது. சமீபத்தில் நடிகை மேக்னா தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் .விவாகரத்தான சில நாட்களிலேயே டாம் டோனி வேறொரு பெண்ணை இரண்டாவது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

கடந்த கால நினைவுகள்

கடந்த கால நினைவுகள்

தற்போது மேக்னா மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் என்னிடம் பல பேர் எதற்காக விவாகரத்து செய்தீர்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி உள்ளனர் .அது முடிந்துபோன ஒன்று என்னுடைய கடந்த கால நிகழ்வுகளை பேசுவதால் எந்த பயனும் கிடையாது. அது மட்டுமல்லாமல் எதற்காக விவாகரத்து பற்றி மௌனமாக இருக்கிறீர்கள் என்று பலரும் தொடர்ந்து என்னை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் நான் இதுவரை எந்த நேரத்திலும் ஒரு வார்த்தை கூட இது பற்றி பகிர்ந்து கொண்டது கிடையாது .இது பற்றி பேச எனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

பிடித்த நபர்

பிடித்த நபர்

மேலும் அவருக்கு பிடித்த நடிகர் சூர்யா தானாம். அவர் காலேஜ் படிக்கும்போது நோட்டுப் புத்தகத்தில் சூர்யா ஸ்டிக்கர் தான் அதிகமாக ஒட்டி வைத்திருப்பாராம் .அவ்ளோ பிடிக்குமாம் அவரை மேலும் நடிகைகளில் சுதாசந்திரன் ரொம்ப பிடிக்குமாம். சுதா சந்திரன் உடன் தெய்வம் தந்த வீடு சீரியலில் மேக்னா நடிச்சு இருப்பாங்க .அவர் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லையாம். சீரியலை போலவே அவர் சுதா அம்மா என்றுதான் அழைப்பாராம். அந்த அளவுக்கு இருவருக்கும் பாசம் இருக்கிறதாம்.

தற்போதைய நிலை

தற்போதைய நிலை

இந்த நிலையில் இவர் தமிழில் தெய்வம் தந்த வீடு சீரியலுக்கு பிறகு பொன்மகள் வந்தாள் அவளும் நானும் போன்ற சீரியல்களில் அடித்து வந்தார் ஆனால் தற்போது இவர் எந்த தமிழ் சீரியல்களிலும் இப்போது நடிக்கவில்லை அவருடைய சொந்த மொழியான மலையாள சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இப்போது வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகமாக காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+