தனுஷ் மீம்ஸ்களை பார்த்து ரசித்து இருக்கிறாரே! இட்லி கடை விழாவில் மகனை பார்த்து கேட்ட கேள்வி! ஆடிப்போன அரங்கம்
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது மட்டுமல்லாமல், தனுஷின் சில நகைச்சுவையான பேச்சுகளால் அரங்கம் முழுக்கச் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதில், அவர் தனது மகன் லிங்காவைக் கலாய்த்ததுதான், இப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்து வருகிறது.

தனுஷும், மகன் லிங்காவும்
தனுஷின் பட விழாக்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்குப் பார்வையாளர்கள் கூட்டம் நிறைந்திருக்கும் திரையரங்குகளில், தனுஷின் இளைய மகன் லிங்கா எப்போதுமே கையில் செல்போனுடன் வீடியோ எடுப்பார். இந்தச் சம்பவத்தை ரசிகர்கள் வீடியோ எடுத்துப் பகிர்ந்ததை வைத்து, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் தெறித்து விழும். "லிங்காவின் போனில் எவ்வளவு ஸ்டோரேஜ் இருக்கும்? பார்க்கும்போது எல்லாம் வீடியோ எடுக்கிறார்!" என்று கிண்டல் செய்தார்கள். சிலர், "புதுப்படங்கள் வெளியான சூட்டோடு வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் வேறு யாரும் இல்லை; லிங்கா தனுஷ்தான்" என்றும் நகைச்சுவையாக மீம்ஸ் போட்டனர். அதிலும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன்னுடைய அப்பாவின் படத்தின் ஹார்ட்டிஸ்க் காணாமல் போய்விட்டது என்று சொல்லி இருந்தார். அப்போது கூட லிங்காவை வீடியோ எடுக்க சொல்லி இருந்தால் அது பத்திரமாக இருந்திருக்கும் என்று கூட சிலர் கலாய்த்து இருந்தனர்.
தனுஷ் கேட்ட கேள்வி
இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில், லிங்கா வழக்கம் போல் வீடியோ எடுக்காமல், அமைதியாக முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அதை கவனித்த தனுஷ், மேடையில் இருந்தபடியே, "என்ன லிங்கா, நம்மள வீடியோ எடுக்கவே இல்லை?" என்று கேட்டார். இந்தச் சம்பவம் நடந்தபோது, அரங்கம் முழுக்கச் சிரிப்பலை அடங்கவே இல்லை.
இதைக் கண்ட ரசிகர்கள், "நடிப்பு ராட்சசனிடம் இருந்து யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது" என்று பிக் பாஸ் புகழ் டைலாக்கை கமெண்டுகளில் தட்டிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். மேலும், லிங்கா நன்றாக வளர்ந்துவிட்டார்; அப்பா போல டான்ஸும் நன்றாக ஆடுகிறார். எனவே, பேசாமல் அவரைக் கோலிவுட்டில் ஹீரோவாக்கி விடுங்கள் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாத்ராவும், லிங்காவும்
தனுஷுக்கு, யாத்ரா என்ற ஒரு மூத்த மகனும் இருக்கிறார். யாத்ராவை பார்த்தால், சிறு வயதில் இருந்த ரஜினியைப் போலவே இருப்பதாக ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். பள்ளிப் படிப்பை முடித்த யாத்ராவுக்கு ஹீரோ ஆகும் ஐடியா இல்லையாம். அதற்குப் பதிலாக, நான் ஒளிப்பதிவாளராகப் போகிறேன் என்று கூறியிருக்கிறாராம். இதனால், தனுஷ் ரசிகர்கள், 'சின்னத் தம்பி லிங்கா ஹீரோவாக வருகிறாரா இல்லை, தாத்தா கஸ்தூரி ராஜா மாதிரி இயக்குநராக வரப் போகிறாரா' என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் நகைச்சுவையாகச் சொல்லி வருகின்றனர்.
இட்லி கடை தனுஷின் கனவு பயணம்
இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், இந்தப் படம் தனது கனவுப் பயணம் என்று தெரிவித்தார். "ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிப்பட்ட உணர்வு இருக்கும். இட்லி கடை உணர்வுப்பூர்வமான ஒரு கதை. படத்தில் நடித்த ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய் உள்ளிட்ட அனைவரும் படத்துக்கு ஒரு பெரிய பலம்.
குறிப்பாக, படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ரீல்ஸுக்காகப் பாட்டு பண்ண மாட்டேன்; படம் வந்த பிறகும் பேசப்படும் மெலடிஸ்தான் பண்ணுவேன் என்று சொன்னதுதான் இந்த படத்தின் மிகப் பெரிய பலம். ரசிகர்கள் ஆதரவு கொடுத்து, இந்தப் படத்தை ஒரு பெரிய வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று தனுஷ் தெரிவித்தார். இந்த விழா, ஒரு திரைப்படம் குறித்துப் பேசுவதைவிட, ஒரு குடும்பம் போலப் பேசிச் சிரித்து மகிழ்ந்த தருணமாக அமைந்தது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications