ரட்சிதா சொன்ன "அந்தப் பதில்” மகிழ்ச்சியில் கணவர் வெளியிட்ட பதிவு.. எதிர்பார்த்தது நடந்து விட்டதே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரட்சிதா குறித்து அவருடைய கணவர் சொன்னது நடந்து விட்டது என்று தற்போது மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விதம் முகம் சுழிக்கும் வகையில் இருந்து வருகிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் ராபர்ட் மாஸ்டர் குறித்து ரட்சிதா பேசியதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுவரைக்கும் ராபர்ட் மாஸ்டர் செய்வதற்கு எல்லாம் ரட்சிதா எந்த ஒரு ரியாக்ஷன் செய்ய மாட்டேன் என்கிறார் என பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ரட்ச்சிதாவின் இன்றைய செயலுக்கு லைக்குகள் அதிகரித்து வருகிறது.

காதலும் வெற்றியும்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் தொடர்ந்து பல சீசன்களில் மீனாட்சியாக நடித்து இப்ப வரைக்கும் சின்னத்திரை மீனாட்சி என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் முதல் சீரியலில் இவரோடு நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களிலும் ரட்சிதா நடித்திருந்தார். அதற்கு தன்னுடைய கணவர் உறுதுணையாக இருந்து வருகிறார் என்றும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் காதலை பல வீடியோக்களிலும் கூறி இருப்பார்.

மாறாத அன்பு
திடீரென்று ரட்சிதா மற்றும் தினேஷுக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வருகின்றனர். கடைசியாக தினேஷ் மற்றும் ரட்சிதா இருவரும் ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார் புறம் என்ற சீரியலில் நடித்திருந்தனர். அதற்கு முன்பு தினேஷ் தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார் .அதற்குப் பிறகு ஒரு சில வருடங்களாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்ட பிறகு இருவரும் தனித்தனியாக தான் வசித்து வருகிறார்களாம். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா கலந்து கொள்வதை தெரிந்து கொண்ட தினேஷ் அவருக்கு வாழ்த்து கூறி மெசேஜ் அனுப்பி இருந்தாராம்.

உறுதியான நம்பிக்கை
இந்த நிலையில் ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவரை பற்றி சேனல் ஒன்றில் உருக்கமாக பேசியிருந்தார். இந்த வீடியோவை ரட்சிதா வெளியே வந்து பார்த்தாலே இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் முறை சரியில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ரட்சிதாவை பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவர் தனக்கு சரி இல்லை என்று தெரிந்தால் டக்கென்று அந்த உறவை முறித்து விடுவார், இப்போதைக்கு எல்லோரும் ஒரு இடத்தில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டரிடம் தான் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தால் அது அந்த இடத்தில் தேவையில்லாத பிரச்சனைகளையும் மன கசப்புகளை தான் எடுக்கும் என அமைதியாக இருந்து வருகிறார் போகப் போக எல்லாருக்கும் தெரியும் என்று உறுதியாக தினேஷ் கூறியிருந்தார்.

நினைத்தது நடந்து விட்டது
இந்த நிலையில் ஆரம்பம் முதலே தினேஷ் கூறி வந்தது போலவே இன்றைய எபிசோட்டில் இந்த வார ஓபன் நாமினேஷனில் ரட்சிதா ராபர்ட் மாஸ்டரின் பெயரை கூறி நிரூபித்து விட்டார் என்று மகிழ்ச்சியில் அவருடைய கணவர் பதிவை வெளியிட்டு இருக்கிறார். ராபர்ட் மாஸ்டரை ரட்சிதா நாமினேஷன் செய்து ராபர்ட் மாஸ்டர் அவராகவே இல்லை அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி இந்த வாரம் வெளியே செல்லலாம் என காரணம் கூறியிருக்கிறார் .இந்த வீடியோவை செந்தில் மற்றும் கவுண்டமணி காமெடியோடு எடிட் செய்து ரசிகர்கள் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த வீடியோவை இவர் பகிர்ந்து இதை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரலாக வலம் வருகிறது.












Click it and Unblock the Notifications