சேரன் இதையே அழுத்தமா சொல்லியிருப்பாரே.. சிவகங்கையில் காலியான இட்லி கடை.. தனுஷ் வைத்த டைட்டில் காரணமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 35, 40 வயது நபர்களுக்கு பழைய நினைவுகளை, தனுஷின் இட்லி கடை படம் தந்துள்ளதாக கூறுகிறார்கள் என்றாலும், அனைவரின் மனதையும் இட்லி கடை படம் கவர்ந்ததாக தெரியவில்லை.. காட்சி அமைப்புகளும் அழுத்தமாக இல்லை.. இந்த படத்தை தனுஷூக்கு பதிலாக வேறு யாராவது இயக்கியிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று இட்லி கடை படத்தை பற்றிய தன்னுடைய கருத்தை பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Gem Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய், சமுத்திரகனி, சத்யராஜ் என பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர்.. பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, ஜிவி பிரகாஷ் இசையில் வந்துள்ள இட்லி கடை படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கணும்

காலியாய் தியேட்டர்கள்

ஆனால், ஏனோ தெரியவில்லை, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை.. தனுஷ், சிம்பு போன்றோர் படங்கள் எப்போதுமே முதல்நாளே புக்கிங் நிறைந்துவிடும்.. எனினும், இட்லி கடையின் முதல் நாள் ஷோவுக்கு நிறைய காலி சீட்கள் காணப்பட்டன.. எனக்கு தெரிந்து, இட்லி கடை என்ற டைட்டிலே ரசிகர்களை சென்றடையவில்லை என தெரிகிறது.

இன்றிருக்கிற தலைமுறையானது, வேறு மாதிரியான தலைப்பை எதிர்பார்க்கிறது.. உதாரணத்துக்கு பார்க்கிங், லவ் டுடே, டிராகன் போன்ற படங்கள் இன்றைய தலைமுறையை வெகுவாக ஈர்த்துவிடுகிறது. அந்த படங்களில் எளிதாக ரசிகர்களும் கனெக்ட் ஆகிவிடுகிறார்கள். இட்லி கடை டிரைலர் வந்தபோதே, அது பெரிதாக பேசப்படவில்லை..

திசை திருப்பிய கரூர் விவகாரம்

அதுவும் இல்லாமல், கரூரில் நடந்த விஜய் சம்பவம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.. 41 உயிர்கள் இறந்துவிடவும், அது தொடர்பாகவே கடந்த ஒருவாரமாக சோஷியல் மீடியாவில் பரபரப்பு செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன..விஜய் லேட்டாக வந்தது 41 பேர் உயிரிழப்புக்கு காரணமா? விஜய் தகுதியான தலைவரா? என்றெல்லாம் மக்கள் விவாதங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த பரபரப்பு காரணமாக, இட்லி கடை படத்தில், மக்கள் சரியான கவனத்தை செலுத்தலையோ? என்று தோன்றுகிறது

2ம் தேதியும் காந்தாரா படமும் வெளியானது..ஆனால் அந்த படத்துக்கும் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு இல்லை.. ஆனால், காந்தாரா அளவுக்குகூட இட்லி கடைக்கு புக்கிங் இல்லை. ஒரு தமிழ் நடிகரான தனுஷின் படத்துக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது..

சிவகங்கை யாழினி தியேட்டர்

ஃபீல் குட் மூவியாக இருப்பதாக விமர்சனங்கள் வருவதால், பரவலாக இட்லி கடை படம் ஓடிக்கொண்டிருக்கிறது.. அதற்காக அதிரிபுதிரியான வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது.. சிவகங்கையில் யாழினி என்ற தியேட்டரில், கூட்டமே இல்லாத காரணத்தினால், இட்லி கடை படத்தின் மாலை நேர காட்சியையே ரத்து செய்துவிட்டார்கள்.. 400-க்கு பேருக்கு மேல் வரவேண்டிய தியேட்டரில் 30 பேர்தான் வந்திருக்கிறார்கள்.

பெரிய எதிர்பார்ப்புடன் வரவேண்டிய படம் எதிர்பார்ப்பு இல்லாமலேயே போய்விட்டது.. படத்தின் கதையிலும், சாதாரணமாக உள்ளதாக கூறுகிறார்கள்.. ஏற்கனவே வந்த கதை போலவே உள்ளதால், அதில் பெரிய ஆர்வம் காட்டப்படவில்லை.இத்தனைக்கும் தொடர் விடுமுறைகள் உள்ளதால், தியேட்டருக்கு நிறைய பேர் வருவார்கள்.. ஆனாலும் தியேட்டர் காலியாக உள்ளது..

சேரன் - அழுத்தமான காட்சிகள்

35, 40 வயது நபர்களுக்கு பழைய நினைவுகளை இந்த படம் தந்துள்ளதாக கூறுகிறார்கள் என்றாலும், அனைவரின் மனதையும் இட்லி படம் கவர்ந்ததாக தெரியவில்லை.. காட்சிகள் அழுத்தமாக இல்லை.. ஒருவேளை சேரன் போன்றோர் இந்த படத்தை எடுத்திருந்தால், அந்த கதையின் அழுத்தத்தை சொல்லியிருப்பார் என்றே தெரிகிறது. தவமாய் தவமிருந்து படத்தை சேரன் அப்படித்தான் அழுத்தமான காட்சியமைப்புடன் தந்திருந்தார்.

இட்லி கடைக்கு ஒரேயொரு ரோடு செட் போட்டுள்ளனர்.. அந்த ரோட்டில்தான் இட்லி கடை, பரோட்டா கடை உள்ளதாக படம் முழுக்க காட்டுகிறார்கள்.. தனுஷ் வீடு, சத்யராஜ் பங்களா காட்டப்படுகிறது.. இதைத்தவிர லொகேஷன் இல்லை.. வயல்வெளி காட்சிகள், பஸ் ஸ்டாப், சந்தை என எதுவுமே படத்தில் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+