2026ல விஜய் முதல்வர் என்று வைத்த காரணம் இதுதான்! ஓபனாக பேசிய யாதும் அறியான் இயக்குநர்
சென்னை: இயக்குநர் கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள யாதும் அறியான் திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த ட்ரெய்லரில் 2026 ஆம் ஆண்டில் கதை நடக்கும் ஒரு காட்சியில் தமிழகத்தில் இனி இலவசங்கள் கிடையாது என முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இது பற்றி இந்த திரைப்பட இயக்குநர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் கோபி இயக்கத்தில் தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் யாதும் அறியான் திரைப்படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. யாரும் அறியான் திரைப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது இந்த ட்ரெய்லரில் முதல்வர் விஜய் என்று சில நோட்டீஸ் இடம் பெற்றிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் இடம் பெற்ற காட்சியில் பெட்டிக்கடை ஒன்றில் வரும் நாளிதழ்கள் போஸ்டர் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

அந்த போஸ்டரில், "தமிழகத்தில் இனி இலவசங்கள் கிடையாது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு புதிய திட்டத்தை முதல்வர் விஜய் அறிவிப்பு" என்ற செய்தி காட்டப்படுகிறது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 2.11 நிமிடம் ஓடக்கூடிய அந்த ட்ரெய்லர் காட்சியில் 0.55வது நிமிடத்தில் கடை ஒன்றில் தினத்தந்தி மற்றும் செய்தி மலர் இதழ்களின் போஸ்டர்கள் தொங்க விடப்பட்டு இருப்பதில் இந்த போஸ்டரும் காட்டப்படுகிறது.
இந்த போஸ்டர் மற்றும் டிரைலர் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தனர். அப்போது அவர்களிடம் இந்த ட்ரெய்லர் குறித்து கேட்கப்பட்டது. அப்போது விஜயை குறித்த செய்திகள் திரைப்படத்தில் வருகிறதே அது சென்சாரில் கட்டானதா? இல்லையா? என்று கேட்க, அதற்கு இயக்குநர் நாங்க அந்த படத்தில் எதிலும் தப்பா எதுவும் வைக்காததால் எதுவும் கட்டாகவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
அதுபோல இந்த காட்சிகளை பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட கூடியவர் தமக கட்சி தலைவர் விஜய் தான், அவரிடம் இந்த காட்சிகளை காட்ட வேண்டும் என்று ஏதாவது முடிவு வைத்து இருக்கிறீர்களா? என்று கேட்க, நாங்கள் இதை ப்ரோமோஷனுக்காக செய்யவில்லை என்பதால் அப்படி ஒரு ஐடியா எங்களிடம் இல்லை என்று இயக்குநர் கூறி இருந்தார்.
அதுபோல இப்போது ஆளும் கட்சியை எதிர்த்து விஜய் பேசிக் கொண்டிருக்கிறார் அவர் அடுத்த வருடத்தில் முதலமைச்சர் என்பது போல நீங்கள் போஸ்டர் போட்டு இருக்கிறீர்கள் இந்த படத்தை வெளியிடுவதில் பிரச்சனைகள் எதுவும் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது இந்த ட்ரெய்லர் வெளிவந்த பிறகு உங்களுக்கு எதுவும் அழுத்தமும் பிரச்சனையும் வந்ததா? என்று செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு இயக்குநர், "நீங்கள் இவ்வளவு எல்லாம் யோசிக்கிறீங்க ஆனால் அப்படி எதுவும் பிரச்சனை இதுவரைக்கும் எங்களுக்கு வரல. நாங்கள் யாரையும் ட்ரோல் செய்தோ அல்லது யாரையும் கஷ்டப்படுத்தியோ இது போன்ற காட்சிகள் வைக்கவில்லை. எனக்கு சின்ன வயதில் இருந்தே விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். அவருடைய பல விஷயங்கள் எனக்கு மோட்டிவேஷன் கொடுத்தது. அதனால் நான் இப்படி ஒரு காட்சியை என்னுடைய படத்தில் வைத்தேன் அவ்வளவுதான்" என்று இயக்குநர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
கேரளாவில் விஜய் அலை.. ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பினராயி விஜயன்.. அதிர வைத்த சர்வே ரிப்போர்ட்.. ட்விஸ்ட் -
திரிஷாவால் விஜய்க்கு ஏற்படப்போகும் பிரச்சனை.. இனி முட்டு கொடுக்க முடியாது! பிரபலம் ஆதங்கம் -
Vijay: 10 நாட்களில் தமிழகத்தை உலுக்கிய பாலியல் கொலைகள்! விடிந்ததும் பதறி போய் லிஸ்ட் போட்ட விஜய் -
Mr. விஜய் எனக்கு யார்... திரிஷாவுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன்! ஆனால், பார்த்திபன் வெளியிட்ட புது வீடியோ -
வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே! -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
நான் வருவேன்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. சுணங்கி கிடந்த தவெக தலைகளுக்கு.. சர்ப்ரைஸ் தகவல்! -
விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி.. பால்குடம் எடுத்த தவெக பெண்கள்.. திரும்பிப் பார்த்த ஈரோடு! -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications