ரஜினி புத்திசாலிகளை பக்கத்துல வச்சுக்க மாட்டாரு! என்னை பத்தி தப்பா சொல்லிட்டாரு..! ஆர் சுந்தர்ராஜன் ஆதங்கம்
சென்னை: ராஜாதி ராஜா படத்தில் ரஜினிகாந்த் கதை என்னவென்றே தெரியாமல் நடித்தார் என்று ஒரு பேட்டியில் பேசினாராம். அதற்கு ஆர் சுந்தர்ராஜன் இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் இப்படியும் நடந்ததா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் பேட்டி
கருப்பட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர்ராஜன், தான் இயக்குனராக இருந்த காலகட்டத்தில் சினிமாவின் நிலையும் இப்போதைய சினிமா நிலையையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரஜினிகாந்த் தன்னை பற்றி ஒரு பேட்டியில் பேசிய விஷயம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சொல்லி இருந்தார்.
அதாவது ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஆர். சுந்தர்ராஜன் கதையே சொல்ல மாட்டாரு, நான் ராஜாதி ராஜா படத்தில் நடிக்கும் போது கூட என்ன கதைன்னு தெரியாம தான் நடித்தேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் கதை கேட்காமல் நடிக்க சம்மதிப்பாரா? அவர் அந்த அளவுக்கு முட்டாளாக இருக்கிறாரா? அவர் புத்திசாலிகளை பக்கத்தில் வச்சிக்க மாட்டாரு.

ரஜினிகாந்த் பற்றி குற்றச்சாட்டு
என்னை பத்தி அப்போ இருந்தே இது போல தான் சிலர் தப்பு தப்பா பேசி பல இயக்குனர்கள் நான் இப்படித்தான் என்றே நினைத்து விட்டார்கள். அந்த காலத்தில் இயக்குனர்கள் மட்டுமல்லாமல் பேரரசு வரைக்கும் இப்படித்தான் என்னைப் பற்றி தவறாக தகவல்கள் போயிருக்கிறது என்று அந்த நிகழ்ச்சியில் சுந்தர்ராஜன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் பெண்களை விட எங்கேயும் அழகு இல்ல.. சினிமாவில் இருக்கும் ஏற்றத்தாழ்வு.. ஆர். சுந்தர்ராஜன் பேட்டி
அதே போல ராஜாதி ராஜா சாதாரண படம் இல்ல. 1989இல் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ராதா, நதியா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். அதுபோல சுந்தர்ராஜன் தான் இந்த படத்தின் இயக்குனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் ரஜினியின் 125 வது படமாகவும் இருந்தது. இந்த படம் வெளியான பிறகு மிகப் பெரிய வெற்றியை பெற்று 175 நாட்கள் ஓடி இருந்தது. அப்படி ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த ரஜினிகாந்துக்கு கதை தெரியாது என்று சொன்னால் அது எப்படி சார் என்பது தான் சுந்தர்ராஜனின் வாதம்.
யார் இந்த சுந்தர்ராஜன்
இப்போது பலருக்கும் சின்னத்திரை மற்றும் குணச்சித்திர நடிகராக தான் ஆர் சுந்தர்ராஜனை தெரிந்திருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்தவர். 1982ல் வெளியான பயணங்கள் முடிவதில்லை படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள், மெல்ல திறந்தது கதவு, அம்மன் கோவில் கிழக்காலே, குங்குமச்சிமிழ், காலையும் நீயே மாலையும் நீயே, என் ஜீவன் பாடுது உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவான வைதேகி காத்திருந்தால் ராஜாதி ராஜா போன்ற படங்கள் 80ஸ், 90ஸ் ரசிகர்களின் ஃபேவரிட் படங்கள்.


Click it and Unblock the Notifications
